MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?

அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருக்கு முக்கிய பதவி.. போட்டியிடும் தொகுதி இதுதான்?

Leema Rose: லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் கடந்த 17ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 26 2026, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி
Image Credit : Asianet News

பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி

தேர்தல் என்றாலே அரசியல் பிரமுகர் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணைப்பொதுச்செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி திடீரென ஐஜேகேவில் இருந்து விலகுவதாக பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், 14 ஆண்டுகளாக நேரம் காலம் பார்க்காமல் நான் உழைத்தேன். கட்சி, என் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் சமீப காலமாக எனது உழைப்பை உதாசீனப்படுத்தியதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஐஜேகேவில் இருந்து விலகல்
Image Credit : Asianet News

ஐஜேகேவில் இருந்து விலகல்

இதுபோன்ற சூழலில் இக்கட்சி ஒரு பெண்ணுக்கு அங்கீகாரம் வழங்காதது பெரும் ஏமாற்றமே. கட்சித் தலைமையில் இருந்து எந்த ஒரு முறையான பதிலும் வராத காரணத்தினாலும், சில சமீபகால கசப்பான அனுபவங்களின் அடிப்படையிலும் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்க நான் தள்ளப்பட்டுள்ளேன் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கடந்த 17ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

35
லீமா ரோஸ்க்கு அதிமுகவில் முக்கிய பதவி
Image Credit : Asianet News

லீமா ரோஸ்க்கு அதிமுகவில் முக்கிய பதவி

இந்நிலையில் அதிமுகவில் இணைந்த ஒரே வாரத்தில் லீமா ரோஸுக்கு அக்கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

45
திருவாடானை தொகுதியில் போட்டி
Image Credit : Asianet News

திருவாடானை தொகுதியில் போட்டி

லீமா ரோசுக்கு மாநில அளவில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் லீமா ரோஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

55
ஆதவ் அர்ஜுனா மாமியார்
Image Credit : Asianet News

ஆதவ் அர்ஜுனா மாமியார்

லீமா ரோஸின் மகன் ஜோ சார்லஸ் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கி புதுச்சேரி அரசியலில் அதிரடி காட்டி வருகிறார். அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் மேலாண்மை பொதுச்செயலாளர்  இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Weather Report: சென்னையை நடுநடுங்க வைத்த பேய் மழை.! இனி எல் நினோ என்ன செய்யும்? மழை தொடருமா?
Recommended image2
Now Playing
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எல்.முருகனுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
Recommended image3
Madurai Veeramani: மதுரை வீரமணிக்கு ஸ்வீட் பாக்ஸ் கிடைச்சிருச்சு.. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் கொடுத்த சர்ப்ரைஸ்!
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Recommended image2
ரொம்ப பந்தா பண்ணும் இபிஎஸ்.. மற்றொரு புறம் புலம்புகிறார்.. அமைச்சர் கீதா ஜீவன் விளாசல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved