MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..

பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..

Holiday: அய்யா வைகுண்டர் அவதார விழாவை ஒட்டி வரும் மார்ச் 4ம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 25 2026, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குஷியில் பள்ளி மாணவர்கள்
Image Credit : Google

குஷியில் பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் பொது விடுமுறையை தவிர்த்து பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்கள், தலைவர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கம். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

25
மார்ச் 4,10ம் தேதி விடுமுறை
Image Credit : Getty

மார்ச் 4,10ம் தேதி விடுமுறை

இந்நிலையில் அய்யா வைகுண்டரின் அவதார விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அய்யா வைகுண்டசாமியின் 194-வது அவதார திருநாளை முன்னிட்டு மார்ச் 4 மற்றும் மார்ச் 10ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Related image2
இன்று 13 மாவட்டங்களில் விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!
35
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது
Image Credit : Google

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது

அதாவது அய்யா வைகுண்டர் அவதார விழாவை ஒட்டி வரும் மார்ச் 4ம் தேதி, மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவை ஒட்டி மார்ச் 10ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

45
சனிக்கிழமைகள் வேலை நாளாக அறிவிப்பு
Image Credit : our own

சனிக்கிழமைகள் வேலை நாளாக அறிவிப்பு

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 7 மற்றும் 14ம் தேதி சனிக்கிழமைகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

55
மார்ச் 4ம் தேதி 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
Image Credit : our own

மார்ச் 4ம் தேதி 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அடுத்தடுத்து உள்ளூர் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் குஷியில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு மார்ச் 4ம் தேதி புதன் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிகள் விடுமுறை
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்த வீடும் இல்லை; காரும் இல்லை.. வெறும் ரூ.2,000-ல் வாழ்க்கை நடத்திய ஐயா நல்லகண்ணு.. அரசியலில் ஓர் அதிசயம்!
Recommended image2
அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! விடாமல் தூக்கிச் சென்ற மகேஷ்! என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டான்.. தாயிடம் கதறல்!
Recommended image3
சிகரெட்டால் பொசுக்கப்பட்ட மீசை... யாரும் அறியாத நல்லகண்ணு-வின் மறுபக்கம்..!
Related Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.! விடுமுறை தொடர்பான சூப்பர் அறிவிப்பு வெளியானது!
Recommended image2
இன்று 13 மாவட்டங்களில் விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved