MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்று 13 மாவட்டங்களில் விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

இன்று 13 மாவட்டங்களில் விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!

தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 25 2026, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாட்டி வதைக்கும் வெயில்
Image Credit : our own

வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காலை முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். ஈரோட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

24
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Image Credit : Asianet News

தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?
Related image2
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
34
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
Image Credit : our own

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இந்நிலையில் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கடந்த 2 நாட்களாக நெல்லை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

44
13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

இன்றும் இதே நிலை தொடரும். ஆனால் மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். திருப்பூரில் உள்ள கொங்கு மண்டலத்தின் சில பகுதிகள், கோயம்புத்தூர், நீலகிரி, ராமநாதபுரத்தின் உட்புறப் பகுதிகள் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை பெய்யும். பின்னர் மழை மேகங்கள் கேரளாவை நோக்கி நகர்ந்து அங்கு மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கனமழை
மழை செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?
Recommended image2
மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Recommended image3
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
Related Stories
Recommended image1
என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?
Recommended image2
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved