- Home
- Tamil Nadu News
- Aadhav Arjuna Divorce : விவாகரத்து முடிவை அறிவித்த ஆதவ் அர்ஜுனா - டெய்ஸி ஜோடியின் சொத்து மதிப்பு எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...!
Aadhav Arjuna Divorce : விவாகரத்து முடிவை அறிவித்த ஆதவ் அர்ஜுனா - டெய்ஸி ஜோடியின் சொத்து மதிப்பு எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க...!
Aadhav Arjuna and Wife Daisy combined net worth : விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்ஸி, தாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்துள்ளார்.

Aadhav Arjuna and Wife Daisy Divorce
தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்டின் ஆகியோரின் பிரிவு குறித்த அறிவிப்புதான். கடந்த 14 ஆண்டுகளாகத் திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இருவரும், தற்போது தங்களது உறவை முடித்துக்கொண்டு தனித்தனியாகப் பயணிக்க முடிவு செய்துள்ளனர். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த முடிவு குறித்து டெய்சி மார்டின் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 14 ஆண்டுகளாகத் தாங்கள் அன்புடனும் புரிதலுடனும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். நண்பர்களாக, வாழ்க்கைத்துணையாக, பெற்றோராக எனப் பல்வேறு பொறுப்புகளுடன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்த நிலையில், தற்போது இருவரும் மனமொத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெய்ஸி வெளியிட்ட அறிக்கை
மேலும், இந்தப் பிரிவு பரஸ்பர சம்மதத்துடன் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் தனது அறிக்கையில் டெய்சி தெளிவுபடுத்தியுள்ளார். கணவன், மனைவி என்ற உறவு முடிவுக்கு வந்தாலும், பெற்றோர் என்ற பொறுப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். தங்களது குழந்தைகளின் எதிர்காலம், மகிழ்ச்சி மற்றும் நலனே இனிவரும் காலங்களிலும் இருவருக்கும் முதன்மையானதாக இருக்கும் என்றும், குழந்தைகளை இணைந்தே வளர்ப்பதில் முழு கவனம் செலுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், ஆதவ் அர்ஜுனா மீதான தனது மரியாதை எப்போதும் குறையாது என்றும் டெய்சி தெரிவித்துள்ளார். அவர் எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைப் பாதையில் அமைதியும் வெற்றியும் கிடைக்க வேண்டும் என மனதார வாழ்த்தியுள்ளார். பிரிவு என்ற முடிவை அறிவித்திருந்தாலும், அதில் எந்தவிதமான கசப்பான வார்த்தைகளுக்கும் இடமளிக்காமல் இருவருக்கும் இடையிலான மரியாதையை வெளிப்படுத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதிய பயணம்
தற்போது வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தை நோக்கிப் பயணிக்கத் தயாராகி வரும் இந்தச் சூழலில், தங்களது தனிப்பட்ட விஷயங்களுக்கு பொதுமக்களும் ஊடகங்களும் உரிய மதிப்பளிக்க வேண்டும் என்றும் டெய்சி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மாற்றத்தை எதிர்கொள்ள தங்களுக்கு சிறிது தனிப்பட்ட இடமும் புரிதலும் தேவைப்படுவதாக அவரது அறிக்கை உணர்த்துகிறது.
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் ஆதவ் அர்ஜுனாவின் குடும்ப வாழ்க்கை தொடர்பான இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு இருவரும் பிரியும் முடிவை எடுத்திருந்தாலும், குழந்தைகளின் நலனை முன்னிறுத்தி ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கியிருப்பது தற்போது பேசப்பட்டு வருகிறது.
சொத்து மதிப்பு எவ்வளவு?
அவர்கள் இருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அவர் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தனது அசையும் மற்றும் அசையா சொத்து மொத்தம் 197.52 கோடி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் அவருடைய மனைவி டெய்சிக்கும் 162.14 கோடிக்கும் அசையும் சொத்து இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். தனக்கு ஆண்டு வருமானம் 11.10 கோடி என்றும், தன் மனைவிக்கு 6.85 கோடி என்றும் ஆதவ் அர்ஜுனா அதில் குறிப்பிட்டிருந்தார்.









