MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

மெட்ரோ ரயில்களில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.. சூப்பர் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!

டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Feb 25 2026, 11:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்
Image Credit : our own

மெட்ரோ ரயில்களில் இலவச பயணம்

டி20 உலகக்கோப்பையில் இந்தியா vs ஜிம்பாப்வே அணிகள் இடையிலான சூப்பர் 8 போட்டி நாளை (பிப்ரவரி 24) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை நேரில் காண டிக்கெட் வைத்திருப்பவர்கள் நாளை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ''சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, பிப்ரவரி 26, 2026 (நாளை) அன்று சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs ஜிம்பாப்வே கிரிக்கெட் போட்டியைப் பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி டிக்கெட் வைத்திருந்தால் போதும்
Image Credit : Team India\BCCI

இந்தியா vs ஜிம்பாப்வே போட்டி டிக்கெட் வைத்திருந்தால் போதும்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது. கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம்.

தனித்துவமான QR குறியீடுகள்

டிஜிட்டல் நுழைவு பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீடுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் பிப்ரவரி 26, 2026 (நாளை) அன்று ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

34
சிறப்பு மெட்ரோ சேவைகள்
Image Credit : Asianet News

சிறப்பு மெட்ரோ சேவைகள்

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 27.02.2026), வழித்தடம் 1-ல் (நீலவழித்தடம்) விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 12 மணிக்கும் (12am – 27.02.2026) இயக்கப்படும். 

சிறப்பு மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் காலத்தில் (அதாவது இரவு 11:00 மணிக்குப் பின்பு), வழித்தடம் 2-ல் (பச்சை வழித்தடம்) உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாறி செல்ல இயலும்.

44
முன்கூட்டியே ரயில் நிலையம் வர வேண்டும்
Image Credit : our own

முன்கூட்டியே ரயில் நிலையம் வர வேண்டும்

பயணிகள் கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வந்து விட வேண்டும். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, பயணிகள் தங்களது பயணச்சீட்டுகளை (Tickets) அந்தந்த மொபைல் செயலி அல்லது இணையதளம் மூலமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தானியங்கி நுழைவு வாயில்களில் உங்களது QR குறியீட்டை காண்பிக்கும் போது, நுழைவதிலும், வெளியேறுவதிலும் தாமதமோ அல்லது சிரமமோ ஏற்படாமல் இருக்க, QR குறியீட்டை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரத்யேக சலுகையைப் பயன்படுத்தி, போட்டி நடைபெறும் இடத்திற்குச் சென்று, தடையில்லா பயணத்தை அனுபவியுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை
தொடருந்து நிலையம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Public Exam Time Table : 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! எத்தனை நாட்கள் நடைபெறுகிறது? முழு விவரம்!
Recommended image2
Now Playing
தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் கடல் சீற்றம்: எழும் அலைகளால் பரபரப்பு !
Recommended image3
Now Playing
கைத்தறி பொருட்களை உலகளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை : கோவையில் அமைச்சர் விஜயா பாலாஜி உறுதி!
Related Stories
Recommended image1
T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
Recommended image2
சென்னை மெட்ரோ பயண அட்டை தொலைந்துவிட்டதா? பேலன்ஸ் தொகை மாற்ற முடியுமா? மெட்ரோ விளக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved