MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!

TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!

TN Crop Loan Waiver: விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : May 25 2026, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி
Image Credit : AI

விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத். கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதி. திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 ஆம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி. பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும். தமிழ்நாடு அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி முழுமையாக ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பெற்ற பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
50 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் 100% தள்ளுபடி
Image Credit : Asianet News

50 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் 100% தள்ளுபடி

அதாவது கூட்டுறவு வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மிகப் பெரிய சலுகையாக, அவர்களது கடன் தொகை முழுவதும் முற்றிலுமாகத் தள்ளுபடி (100% தள்ளுபடி) செய்யப்படுகிறது. ரூ.50,000 வரை கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்த வேண்டாம். அதே வேளையில், இதே வரம்பிற்குள் (ரூ. 50,000 வரை) கடன் வாங்கியுள்ள சிறு விவசாயிகளுக்கு, அவர்களது மொத்த நிலுவைத் தொகையில் சரிபாதி, அதாவது 50% தொகை தள்ளுபடி செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சிறு விவசாயிகள் 50% கடன் மட்டும் செலுத்தினால் போதும்.

Related Articles

Related image1
ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!
Related image2
விவசாயிகள் அக்கவுண்ட்டில் வரப்போகும் ரூ.2,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கட்? முழு விவரம்!
35
ரூ.50,001 முதல் ரூ.60,000 வரையிலான கடன்கள்
Image Credit : Asianet News

ரூ.50,001 முதல் ரூ.60,000 வரையிலான கடன்கள்

மேலும் 50,000 ரூபாய்க்கு மேல், 60 ஆயிரம் ரூபாய் வரை பயிர்க்கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும் கடன் கணக்கிலிருந்து தள்ளுபடி செய்யப்படவுள்ளது. கடன் தொகை 60,001 ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு அதில் பாதியான 15,000 ரூபாயும் தள்ளுபடிச் சலுகையாக வழங்கப்படுகிறது.

ரூ. 60,001 முதல் ரூ. 70,000 வரையிலான கடன்கள்

கடன் தொகை 60,001 ரூபாயிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு 30,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு அதில் பாதியான 15,000 ரூபாயும் தள்ளுபடிச் சலுகையாக வழங்கப்படுகிறது.

ரூ. 70,001 முதல் ரூ. 80,000 வரையிலான கடன்கள்

இந்த வரம்பில் பயிர்க்கடன் பெற்று நிலுவை வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு 20,000 ரூபாயும், சிறு விவசாயப் பிரிவினருக்கு 10,000 ரூபாயும் தள்ளுபடி செய்ய அரசு வழிவகை செய்துள்ளது.

45
ரூ. 80,001 முதல் ரூ. 1,00,000 வரையிலான கடன்கள்
Image Credit : Getty

ரூ. 80,001 முதல் ரூ. 1,00,000 வரையிலான கடன்கள்

விவசாயிகளின் கடன் தொகை 80,001 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில், குறு விவசாயிகளுக்கு நிலையான தொகையாக 10,000 ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு தலா 5,000 ரூபாயும் கடனிலிருந்து கழிக்கப்படும்.

ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன்கள்

கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பெருந்தொகையைப் பயிர்க்கடனாகப் பெற்றுள்ள குறு மற்றும் சிறு விவசாயிகள் இரு தரப்பினருக்குமே, சமமாக தலா 5,000 ரூபாய் வீதம் கடன் தள்ளுபடி சலுகை அளிக்கப்படும்.

55
14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள்
Image Credit : Getty

14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள்

மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5.000/- பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விவசாயக் கடன்
தமிழ்நாடு
கடன்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Powercut Update : சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (மே 26) 5 மணி நேரம் மின்தடை
Recommended image2
Tamil Nadu Rain Alert : தமிழகத்தில் நாளை முதல் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Recommended image3
Now Playing
“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
Related Stories
Recommended image1
ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!
Recommended image2
விவசாயிகள் அக்கவுண்ட்டில் வரப்போகும் ரூ.2,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கட்? முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved