MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Diwali Pooja Time : தீபாவளி 2026..பூஜை நேரம், சுப முகூர்த்தம், எண்ணெய் குளியல், முழு விவரம்!

Diwali Pooja Time : தீபாவளி 2026..பூஜை நேரம், சுப முகூர்த்தம், எண்ணெய் குளியல், முழு விவரம்!

Diwali Pooja Time : தீபாவளி அதிகாலை எண்ணெய் குளியல் செய்ய உகந்த நேரம், லட்சுமி குபேர பூஜை முகூர்த்தம், நல்ல நேரம், கேதார கௌரி விரதம் மற்றும் தீபாவளியின் ஆன்மிக சிறப்புகள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 04 2026, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தீபாவளி பூஜை நேரம்
Image Credit : Gemini Ai

தீபாவளி பூஜை நேரம்

தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், கார வகைகள் என வீடெங்கும் மகிழ்ச்சி பொங்கும். அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, குடும்பத்தினருடன் பலகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் அந்த இனிய தருணங்களுக்கு ஈடு இணையே இல்லை. இருளை அகற்றி ஒளியை ஏற்றும் தீபாவளி, தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி எந்த தேதியில் வருகிறது? அதிகாலையில் எண்ணெய் குளியல் செய்ய வேண்டிய நேரம் எது? லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் என்ன? கேதார கௌரி விரதம் எப்போது அனுசரிக்க வேண்டும்? எனப் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில், தீபாவளி 2026 தேதி, பூஜை நேரம், சுப முகூர்த்தம், நல்ல நேரம் மற்றும் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தீபாவளி 2026 எப்போது?
Image Credit : Gemini Ai

தீபாவளி 2026 எப்போது?

தேதி: நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மாதம்: ஐப்பசி 22

திதி: கிருஷ்ண பட்ச சதுர்த்தசி மற்றும் அமாவாசை

சிறப்பு: நரகாசுரன் வதம், தீபாவளி கொண்டாட்டம், கேதார கௌரி விரதம்

36
தீபாவளி பூஜை நேரம் மற்றும் சுப முகூர்த்தம்
Image Credit : Gemini Ai

தீபாவளி பூஜை நேரம் மற்றும் சுப முகூர்த்தம்

தீபாவளி நாளில் அதிகாலையில் எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, குடும்ப வழக்கப்படி இறைவனை வழிபடுவது சிறப்பு. மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்து விளக்கேற்றி வழிபடலாம்.

எண்ணெய் குளியல்: அதிகாலை 4:30 - 6:06 மணி (சூரிய உதயத்திற்கு முன்)

காலை பூஜை / படையல் : காலை 7:45 - 8:45 மணி

லட்சுமி குபேர பூஜை : மாலை 6;07 மணி முதல் இரவு 8;09 வரை

லட்சுமி பூஜை முகூர்த்தம் : மாலை 6:06 - இரவு 8:09


தீபாவளி 2026 நல்ல நேரம்

சென்னை வாக்கியப் பஞ்சாங்கக் கணிப்பின்படி,

காலை நல்ல நேரம்: 7:45 - 8:45

மாலை நல்ல நேரம்: 3:15 - 4:15

ராகு காலம்: மாலை 4:30 - 6:00

எமகண்டம்: மதியம் 12:00 - 1:30

குளிகை: பிற்பகல் 3:00 - 4:30

46
கேதார கௌரி விரதம்
Image Credit : Gemini Ai

கேதார கௌரி விரதம்

தீபாவளி நாளில் அனுசரிக்கப்படும் முக்கிய விரதங்களில் கேதார கௌரி விரதமும் ஒன்று. பார்வதி தேவி சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்தில் இடம் பெறுவதற்காக இந்த விரதத்தை மேற்கொண்டதாக ஆன்மிக நம்பிக்கை கூறுகிறது.

விரதத்தின் சிறப்புகள்

  • சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபடுதல்.
  • குடும்ப ஒற்றுமை, தம்பதியர் நலன் மற்றும் மங்கள வாழ்வு வேண்டி பிரார்த்தனை செய்தல்.
  • குடும்ப மரபுப்படி நோன்பு இருந்து, பூஜை செய்து, நோன்புக் கயிறு அணிதல்.
  • விரத முறைகள் குடும்பம் மற்றும் கோவில் வழக்கப்படி மாறுபடலாம்.


புரட்டாதி மாதம் அஷ்டமி/தசமியில் தொடங்கி, ஐப்பசி மாத அமாவாசை (தீபாவளி நாள்) வரை 21 நாட்கள் இந்த விரதம் அனுசரிக்கப்படுகிறது. பலர் ஐப்பசி அமாவாசை நாளில் மட்டும் ஒருநாள் விரதமாகவும் கடைபிடிக்கின்றனர்.

சில குடும்பங்களில் 21 நாட்களுக்குப் பதிலாக 9 நாட்கள், 5 நாட்கள், 3 நாட்கள் அல்லது தீபாவளி அமாவாசை அன்று மட்டும் ஒருநாள் விரதமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

56
தீபாவளி கொண்டாடப்படுவதன் ஆன்மிக சிறப்பு
Image Credit : Gemini Ai

தீபாவளி கொண்டாடப்படுவதன் ஆன்மிக சிறப்பு

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இருளை அகற்றி ஒளியைப் பரப்புவது போல, வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் நன்மைகள் பெருக வேண்டும் என்பதைக் குறிக்கும் பண்டிகையாக இது கொண்டாடப்படுகிறது.

நரகாசுரன் வதம்: புராணக் கதைகளின்படி, மக்களைத் துன்புறுத்தி வந்த நரகாசுரனை கிருஷ்ணர் மற்றும் சத்யபாமா அழித்தனர். நரகாசுரன் அழிந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதே தீபாவளி என்று நம்பப்படுகிறது.

லட்சுமி வழிபாடு: தீபாவளி அமாவாசை நாளில் மகாலட்சுமியை வழிபடுவது செல்வ வளம், குடும்ப நலம் மற்றும் மகிழ்ச்சியை வேண்டி செய்யப்படும் பாரம்பரிய வழிபாடாகும்.

தீபம் ஏற்றுதல்: வீட்டின் வாசல், பூஜையறை மற்றும் சுற்றுப்புறங்களில் விளக்கேற்றி இருளை அகற்றுவது தீபாவளியின் முக்கிய அடையாளமாகும்.

66
லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?
Image Credit : Gemini Ai

லட்சுமி குபேர பூஜை செய்வது எப்படி?

  • வீட்டைச் சுத்தம் செய்து, பூஜையறையில் கோலம் போட்டு விளக்கேற்றவும்.
  • மகாலட்சுமி, விநாயகர் மற்றும் குபேரர் படங்களை வைத்து பூக்களால் அலங்கரிக்கவும்.
  • மஞ்சள், குங்குமம், சந்தனம், மலர்கள், பழங்கள் மற்றும் இனிப்புகளைப் படைக்கவும்.
  • நெய் அல்லது எண்ணெய் தீபம் ஏற்றி, குடும்ப வழக்கப்படி மந்திரங்கள் அல்லது ஸ்தோத்திரங்களைச் சொல்லி வழிபடவும்.
  • குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்து, பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்ளவும்.


தீபாவளி 2026 நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, மாலையில் விளக்கேற்றி லட்சுமி குபேர பூஜை செய்வது பண்டிகையின் முக்கிய அம்சங்களாகும். குடும்ப மரபு மற்றும் உள்ளூர் பஞ்சாங்கப்படி பூஜை நேரத்தை உறுதி செய்து, மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தீபாவளி பண்டிகை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்பு: மாணவர்களுக்கு பரிசளித்து வாழ்த்து!
Recommended image2
Now Playing
அரசியல் பேச வரல, உங்க அண்ணனா வந்திருக்கேன் ! கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் அதிரடி பேச்சு
Recommended image3
TVK MLA-க்களுக்கு ரூ.15 கோடி பேரம்: அதிமுக, திமுக மீது தவெக எம்.எல்.ஏ வைத்த குதிரை பேர குற்றச்சாட்டால் பரபரப்பு
Related Stories
Recommended image1
Soorasamharam Story: சூரசம்ஹாரம்..சூரனை அழித்த முருகப்பெருமான்! மயிலும் சேவலும் உருவானது எப்படி? புராணக் கரகசியம் என்ன?
Recommended image2
Kedara Gowri viratham : தீபாவளி நோன்பு 2026.. கேதார கௌரி விரதத்தின் மகிமை, வழிபாட்டு முறை, விரதக் கதை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved