அரசியல் பேச வரல, உங்க அண்ணனா வந்திருக்கேன் ! கல்வி விருது விழாவில் முதல்வர் விஜய் அதிரடி பேச்சு

Share this Video

சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான 'தளபதி கல்வி விருது வழங்கும் விழாவில்' தவெக தலைவரும் நடிகருமான விஜய் கலந்து கொண்டார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். விழாவில் பேசிய அவர், "நான் இங்கு அரசியல் பேசவோ அல்லது ஓட்டு கேட்கவோ வரவில்லை; எப்போதும் போல உங்கள் அண்ணனாகவே வந்திருக்கிறேன். மாணவர்கள் அனைவரும் தங்களின் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டு, தடைகளைக் கண்டு அஞ்சாமல் சாதனைகளைப் படைக்க வேண்டும். போதைப்பொருட்கள் மற்றும் தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Related Video