MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

ரூ.1.20 லட்சம் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் அரசு.. குஷியில் துள்ளி குதிக்கும் விவசாயிகள்!

தமிழக அரசு, வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு களை எடுக்கும் இயந்திரம் வாங்க மானியம் வழங்குகிறது. 70 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.1.20 லட்சம் வரை இந்த மானியம் வழங்கப்படுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 17 2026, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசு விவசாயிகளுக்காக இலவச மின்சாரம், சூரியசக்தி பம்ப்செட்டுகள், உழவன் செயலி, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் களை எடுக்கும் இயந்திரம் வாங்க 70 சதவிகிதம் வரை மானியத்தை வழங்கி வருகிறது.

25
Image Credit : Google

இது தொடர்பாக தமிழக அரசின் வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்: வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தின் கீழ் விசை களையெடுப்பான்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 2 குதிரை திறன் முதல் 7.5 குதிரை திறன் கொண்ட இயந்திரம் வாங்க தமிழக அரசானது அதிகபட்சமாக 1.20 லட்சம் வரை மானியம் வழங்கி வருகிறது.

Related Articles

Related image1
தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!
Related image2
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
35
Image Credit : Asianet News

2 குதிரைத் திறன் முதல் 5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 56.000 வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 48,000 வரை மானியமாக வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 40.000 வரையும், இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 32,000 வரை மானியமானது வழங்கப்படுகிறது.

45
Image Credit : TNDIPR

5 குதிரைத் திறன் முதல் 7.5 குதிரைத்திறனுக்குக் கீழ் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடியது இயந்திரம் வாங்க ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,05000 வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக . 90,000 மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 75,000 வரை மானியமும், இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 60,000 மானியமாக வழங்கப்படுகிறது.

55
Image Credit : our own

7.5 மற்றும் அதற்கும் மேல் குதிரைத் திறன் உள்ள இன்ஜினால் இயங்கக்கூடிய இயந்திரங்கள் வாங்க, ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 70% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1,19,000 வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத இதர பிரிவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 60% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10.2000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு பிரிவில் அல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 85,000 வரையும் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40% சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5. 68,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
விவசாயக் கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
'நடிகருக்காக விசில் அடிக்கலாம், நாட்டை விட்டுக்கொடுக்க முடியாது' - விஜய்யை விளாசிய பிரகாஷ் ராஜ்
Recommended image2
Now Playing
கீ கொடுத்தால் மட்டுமே பேசுபவர் ஸ்டாலின்.! - அண்ணாமலை கொடுத்த பதிலடி!
Recommended image3
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
Related Stories
Recommended image1
தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!
Recommended image2
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved