MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!

தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!

பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 3 நாட்களுக்கு 10,663 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 17 2026, 08:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழக சட்டமன்ற தேர்தல்
Image Credit : Gemini AI

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் 21ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் வேட்பாளர்கள் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தேர்தல் ஆணையம் அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை தமிழக முழுவதும் செய்து வருகிறது.

26
தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு
Image Credit : Asianet News

தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு

மக்கள் கூட கூடிய பொது இடங்கள், பூங்காக்கள், பஸ் நிலையம், கடற்கரை, மால்கள் உள்ளிட்ட இடங்களில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 23-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Related Articles

Related image1
ஊரைவிட்டு வந்த அண்ணாச்சி... ஊரெல்லாம் சரவணா ஸ்டோர் உருவானது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்
Related image2
பொதுமக்களே.. தப்பி தவறி கூட இந்த நேரத்தில் வெளியே போயிடாதீங்க.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்
36
சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
Image Credit : our own

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

இந்நிலையில், பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மொத்தம் 10,663 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21 முதல் 23ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,574 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி 3,496 பேருந்துகளும், 22ம் தேதி 5,662 பேருந்துகளும், 23ம் தேதி 1,505 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பேருந்து நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

46
கிளாம்பாக்கம் (KCBT)
Image Credit : our own

கிளாம்பாக்கம் (KCBT)

கிளாம்பாக்கம் (KCBT) புறநகர் முனையம்

திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், செங்கோட்டை, தூத்துக்குடி, கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி.

கிளாம்பாக்கம் (KCBT) - மாநகர முனையம் (MTC)

திருவண்ணாமலை, போளூர் மற்றும் வந்தவாசி மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு (CMBT)

காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர், திருத்தணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாகச் செல்லும் பேருந்துகள்.

56
மாதவரம் புதிய பேருந்து நிலையம் (MMBT)
Image Credit : Asianet News

மாதவரம் புதிய பேருந்து நிலையம் (MMBT)

பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை செல்லும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக 24 மணி நேரமும் இணைப்புப் பேருந்துகள் (Link Buses) இயக்கப்படும்.

66
கிளாம்பாக்கத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள்
Image Credit : our own

கிளாம்பாக்கத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள்

பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC Official App மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம். பேருந்து இயக்கம் குறித்த சந்தேகங்களுக்கு 94450 14436 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் மூலம் பேருந்து இயக்கம் குறித்து தீவிர கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விடுமுறை
விடுமுறைக்கால சிறப்பு பேருந்து
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விசில் கோலமிட சொன்ன தளபதி.! செய்வோம் என முழக்கமிட்ட சிங்கப்பெண்கள்.!
Recommended image2
Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
Recommended image3
Now Playing
அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கூட்டம்.! அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் இரண்டும் ஒன்றுதான்.!
Related Stories
Recommended image1
ஊரைவிட்டு வந்த அண்ணாச்சி... ஊரெல்லாம் சரவணா ஸ்டோர் உருவானது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்
Recommended image2
பொதுமக்களே.. தப்பி தவறி கூட இந்த நேரத்தில் வெளியே போயிடாதீங்க.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved