MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொதுமக்களே.. தப்பி தவறி கூட இந்த நேரத்தில் வெளியே போயிடாதீங்க.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்

பொதுமக்களே.. தப்பி தவறி கூட இந்த நேரத்தில் வெளியே போயிடாதீங்க.. வானிலை மையம் கொடுத்த வார்னிங்

Tamilnadu Weather: தமிழகத்தில் கோடை வெயில் 100 டிகிரியைத் தாண்டி வாட்டி வதைக்கிறது. வெப்ப அலை வீசும் நிலையில், நீரிழப்பைத் தவிர்க்கவும், பருத்தி ஆடைகளை அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 16 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுட்டெரிக்கும் வெயில்
Image Credit : Asianet News

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வேலூர், ஈரோடு, கரூர், திருச்சி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வெப்பக்காற்று (Heatwave) வீசி வருகிறது. குறிப்பாக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 முதல் 4 வரை அதிகமாக உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
கோடை வெயிலால் அலறும் பொதுமக்கள்
Image Credit : our own

கோடை வெயிலால் அலறும் பொதுமக்கள்

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் சதம் அடித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது அவசியம். நீரிழப்பை (Dehydration) தவிர்க்க இளநீர், மோர், பதநீர் மற்றும் பழச்சாறுகளை அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பருத்தி ஆடைகளை (Cotton clothes) அணிவது உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிவது அவசியம் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
Related image2
கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
35
மழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

மழை எச்சரிக்கை

இந்நிலையில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதாவது சுமார் 1.5 கிமீ உயரத்தில், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைக்குடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 22 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகம் மற்றும் புதுச்சேயில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

45
வெயில் அதிகரிக்கும்
Image Credit : Asianet News

வெயில் அதிகரிக்கும்

இன்று முதல் 20ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம்.

55
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை
Image Credit : Asianet News

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசெளகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெப்ப அலை
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Recommended image2
Now Playing
DMK NDA | பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
Recommended image3
TN Weather Update: சூரியனின் கோரமுகத்திற்கு எண்ட் கார்டு! வெளுக்கப்போகும் கனமழை! குளு குளு வானிலை அப்டேட்!
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
Recommended image2
கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved