MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கோடை விடுமுறை.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு, மனநலம் மற்றும் ஆரோக்கியம் கருதி பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 16 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை
Image Credit : Asianet News

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் ஏப்ரல் முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 45 நாட்கள் கோடை விடுமுறை வருகிறது. இந்நிலையில் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

26
மணவர்களின் பாதுகாப்பு
Image Credit : our own

மணவர்களின் பாதுகாப்பு

கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிக அளவு தண்ணீரை அருந்த செய்யுங்கள் சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவர்கள் தொப்பிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துங்கள். உச்ச சூரிய வெப்ப நேரத்தைத்தில் வெளியே செல்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்கவும் (காலை 10 மாலை 4) அறிவுறுத்துங்கள். ஆபத்தான பொருட்களைப் மாணவர்களின் பார்வையில் படாதனறு பாதுகாப்பாக வைக்கவும், மாணவர்கள் நீர் நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிக்க முற்படும் போது நீரில் மூழ்க வாய்ப்பு உள்ளது. எனவே விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
Related image2
அரசு பணியில் இருந்து எதற்காக நீக்கம்... யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
36
மாணவர்களின் மனநலம் காத்தல்
Image Credit : School education pro

மாணவர்களின் மனநலம் காத்தல்

பள்ளி கோடை விடுமுறைநாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும் மனநலனை பேணவும் முடியும். தொலைகாட்சி மற்றும் கைபேசி ஆகியவற்றை பார்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

46
கல்வி இணை செயல்பாடுகள்
Image Credit : Google

கல்வி இணை செயல்பாடுகள்

ஆரோக்கியமான உணவு

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம். அதை உறுதி படுத்தும் விதமாக பராம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அளியுங்கள். கோடை காலத்தை எதிர்கொள்ள ஏதுவாக கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகளை மாணவர்களுக்கு வழங்குங்கள்

கல்வி இணை செயல்பாடுகள்

பெற்றோர்கள் மாணவர்களை அருகாமையில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்து சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும். அவர்களின் ஆர்வங்களைப் பொறுத்து காமிக்ஸ் புத்தகங்கள் பொது அறிவு நூல்கள், சீறார் கதைகள், நீதி நூல்களை மற்றும் பெருத்தலைவர்கள் பற்றிய நூல்களை படிக்க அறிவுறுத்துங்கள். இசை, நடனம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்.

56
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு
Image Credit : our own

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு

மாணவர்கள் கலை மற்றும் இரவு இரண்டு வேளை பல் துலக்குதல், காலை மற்றும் மாலை இரண்டு வேளை குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவியுங்கள். பெற்றோர்களுக்கு உதவியாக சிறு சிறு வேலைகளை செய்ய பழக்கப்படுத்துங்கள். வீட்டுத் தோட்டத்தினை பராமரிக்கவும் புதிய பூச்செடிகளை நடவு செய்து வார்க்க ஊக்கப்படுத்துங்கள்.

66
குடும்பம் மற்றும் சமூக நேரம்
Image Credit : our own

குடும்பம் மற்றும் சமூக நேரம்

தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்துங்கள். மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள். பள்ளி தலைமையாசிரிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்
பள்ளிகள்
பள்ளிகள் விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
கரூரில் கருப்புக்கொடி போராட்டம்! செந்தில் பாலாஜி தலைமையில் கூடிய திமுக தொண்டர்கள்.!
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
Recommended image3
அரசு பணியில் இருந்து எதற்காக நீக்கம்... யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
Recommended image2
அரசு பணியில் இருந்து எதற்காக நீக்கம்... யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved