- Home
- Tamil Nadu News
- அரசு பணியில் இருந்து எதற்காக நீக்கம்... யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
அரசு பணியில் இருந்து எதற்காக நீக்கம்... யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
Savukku Shankar: யூடியூப் சேனல் மூலம் ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளை விமர்சித்து வரும் சவுக்கு சங்கர் தற்போதைய காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் இடையே ஒரு முக்கிய உறவுமுறை உள்ளது.

சவுக்கு சங்கர் என்று அறியப்படும் இவரின் இயற்பெயர் ஆச்சிமுத்து சங்கர். இவரின் தந்தை ஆச்சிமுத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். திருநெல்வேலியில் பிறந்து, திருச்சியில், தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் சில காலம் படித்து, சென்னையில் குடியேறினார். 10ம் வகுப்பு படித்திருந்த போது 1991ம் ஆண்டு ஜூன் மாதம் தந்தை மறைவிற்குப் பிறகு கருணை அடிப்படையில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பணியில் சேர்ந்தார். இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் எஸ். கே. உபாத்தியாய்க்கும் தலைமைச் செயலாளர் எல். கே. திரிபாதிக்குமிடையே நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடலின் குரல் பதிவை தி டெக்கன் குரோனிக்கள் நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விசாரணையில் சுஜாதா என்ற பெயர் கொண்ட பென்டிரைவ் ஒன்று சிக்கியது. இந்த பென்டிரைவ் மூலம்தான் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் ஊடகங்களுக்கு பகிரப்பட்டது என்று தெரிந்தது. இந்த பென்டிரைவை சவுக்கு சங்கர் பயன்படுத்தியதைக் கண்டுபிடித்த போலீசார், சவுக்கு சங்கரின் சகோதரி பெயர் சுஜாதா என்பதால், அவர்தான் தனது சகோதரியின் பென்டிரைவில் ரகசிய தொலைபேசி உரையாடல்களை பதிவுசெய்து ஊடகங்களுக்கு அளித்தது தெரியவந்தது. இதனையடுத்து 2008ம் ஆண்டு சவுக்கு சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
2010ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 2022 செப்டம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்தது. இதனையடுத்து இவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து 2022 நவம்பரில் சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவர் 'ஊழல் உளவு அரசியல்' என்ற புத்தகத்தையும் எழுதினார்.
இதனையடுத்து சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேலை தொடங்கி நடத்தி வந்தார். அதில், ஆளும் திமுக அரசுக்கு எதிரான விமர்சனம் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் காவல் துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும் ஆம்ஸ்ட்ராங் மரணத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கிறது. சிறையில் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சேகர் பாபு மற்றும் செல்வப்பெருந்தகைக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது. செல்வத்தையும் சேகர் பாபுவையும் காப்பாற்றுவதற்காக திருவேங்கடத்தையும் சேசிங் ராஜாவையும் போட்டுத் தள்ளினார் சென்னை காவல் ஆணையர் அருண் என பரபரப்பு குற்றச்சாட்டை சமீபத்தில் கூறினார்.
இந்நிலையில் சவுக்கு சங்கருக்கும் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு என்ன தொடர்பு என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது சுஜாதா பிரபல மத்திய அரசு கல்வி நிறுவனமான திருச்சியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியில் பட்டம் படித்தார். கல்லூரியில் படிக்கும் போது சசிகாந்த் செந்தில் என்பவரை காதலித்தன் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர். 2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சவுக்கு சங்கர் மற்றும் சசிகாந்த் செந்தில் இருவரும் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள். அதாவது, சசிகாந்த் செந்தில் அவர்கள் சவுக்கு சங்கரின் சகோதரியைத் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.‘

