MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!

குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. ஏப்ரல் 21ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்!

TASMAC: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 17 2026, 11:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக சட்டமன்ற தேர்தல்
Image Credit : Google

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டாஸ்டாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை
Image Credit : our own

டாஸ்டாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

இந்நிலையில் ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 04ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது. எச்சரிக்கையை மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
ஏப்ரல் 21ம் தேதி முதல் மூடல்
Image Credit : our own

ஏப்ரல் 21ம் தேதி முதல் மூடல்

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கிர்லோஷ் குமார் சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், டாஸ்மாக் கடைகள், பார்கள் இணைந்த கடைகள் என உரிமம் பெற்ற அனைத்து பார்கள் ஆகியவை வரும் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து விடுமுறை வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ள குடிமகன்கள் தற்போதை மதுபானத்தை வாங்கி வைக்க தொடங்கியுள்ளனர்.

45
 மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
Image Credit : our own

மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளை தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். அதேபோல் வெளிநாட்டு மது வகைகளையும் தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

55
தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள்
Image Credit : Asianet News

தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் இதை அரசு எடுத்து நடத்தி வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.100 கோடிக்கு அளவுக்கு மதுபான விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
Recommended image2
Now Playing
ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
Recommended image3
Now Playing
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
Related Stories
Recommended image1
சரவணா ஸ்டோர் உருவானது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்
Recommended image2
தேர்தலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? போக்குவரத்துறை முக்கிய அறிவிப்பு! பேருந்து நிலையங்கள் திடீர் மாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved