MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?

Tamilnadu Rain: மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம்.. இன்றும், நாளையும் ஓயாமல் மழை ஊத்தப்போகுதாம்.. எந்தெந்த மாவட்டங்களில்?

Heavy Rain Warning: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 24 2026, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, வேலூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
19 மாவட்டங்களில் கனமழை
Image Credit : Asianet News

19 மாவட்டங்களில் கனமழை

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Related Articles

Related image1
திமுகவில் இருந்து முக்கிய பெண் நிர்வாகி திடீர் விலகல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! யார் இந்த மீனா ஜெயக்குமார்?
Related image2
Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
35
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று
Image Credit : Google

மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று

மேலும் மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

45
சென்னையில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை
Image Credit : our own

சென்னையில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
Image Credit : our own

தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் முதல் அல்லது 2ம் வாரம் வரை வெயில் அதிகமாக இருக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். ஆந்திராவை ஒட்டிய பகுதிகளில் தான் வெப்பம் கடுமையாக இருக்கும். வெயில் ஒருபுறம் இருந்தாலும் சென்னையில் சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
வெப்ப அலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
AIADMK: போதுண்டா சாமி! நீங்களும் உங்க கட்சியும்! அதிமுகவிலிருந்து தெறித்து ஓடும் முன்னாள் எம்.பி.! அதிர்ச்சியில் இபிஎஸ்
Recommended image2
Ration: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்வீட் நியூஸ்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்! தமிழக அரசு சொன்ன செம அப்டேட்!
Recommended image3
Now Playing
அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
Related Stories
Recommended image1
திமுகவில் இருந்து முக்கிய பெண் நிர்வாகி திடீர் விலகல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! யார் இந்த மீனா ஜெயக்குமார்?
Recommended image2
Tamilnadu Power Cut: மே 25ம் தேதி! வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved