MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவில் இருந்து முக்கிய பெண் நிர்வாகி திடீர் விலகல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! யார் இந்த மீனா ஜெயக்குமார்?

திமுகவில் இருந்து முக்கிய பெண் நிர்வாகி திடீர் விலகல்! அதிர்ச்சியில் ஸ்டாலின்! யார் இந்த மீனா ஜெயக்குமார்?

DMK: திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கட்சியில் நிலவும் சாதி அரசியல் மற்றும் அங்கீகாரம் மறுக்கப்பட்டதாகக் கூறி தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 23 2026, 02:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 மீனா ஜெயக்குமார்
Image Credit : Asianet News

மீனா ஜெயக்குமார்

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் செயல்பட்டு வந்தார். அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் வேட்பாளர் லிஸ்டில் மீனா ஜெயக்குமார் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைமையிடம் சீட் கேட்டிருந்தார். ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
லீமா ரோஸை சந்தித்த மீனா ஜெயக்குமார்
Image Credit : Asianet News

லீமா ரோஸை சந்தித்த மீனா ஜெயக்குமார்

இந்நிலையில் அண்மையில் அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏவான லீமா ரோஸ் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இது தொடர்பான போட்டோஸ் வைரலான நிலையில் திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதுதொடர்பாக மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில்: நான் கொலை குற்றமா செய்தேன்? தீவிரவாதியை பார்த்து வந்தோமோ? இதற்கு இவ்வளவு எதிர்ப்பு? திமுக தோற்க காரணமே, சோசியல் மீடியாவில் இப்படி ஒவ்வொருவரை பற்றியும் கமெண்ட் போடுபவர்கள்தான். லீமா ரோஸ் என் கூட பிறந்த அக்கா மாதிரி. 20 ஆண்டு குடும்ப நண்பர். முதலில் நாங்கள் நண்பர்கள், அப்புறம்தான் கட்சிக்குள் வந்தோம். அவர் என்ன கெடுதல் செய்தார்? அவரது தொழிலை வைத்து விமர்சிப்பது முறையல்ல என காட்டமாக கூறியிருந்தார்.

Related Articles

Related image1
Kayalvizhi Join TVK: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தி தவெகவில்? யார் இந்த கயல்விழி? அதிர வைக்கும் பின்னணி
Related image2
Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
35
சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம்
Image Credit : Asianet News

சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம்

மேலும் நான் கட்சிக்காக ஓடி ஓடி உழைத்துள்ளேன். தலைவர் காலில் விழுந்து பதவி பெற முடியும். ஆனால் உழைப்பிற்கான அங்கீகாரம் தானாக வர வேண்டும். திமுக சாதி, மதம் பார்க்காத அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி. ஆனால் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதியை தவிர வேறு யாருக்கும் இடமே இருக்காது. ஒரு சாதிக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. நான் எந்த சாதிக்கும் எதிரானவள் இல்லை. நான் கட்சி மாறவில்லை. ஆனால் நீங்கள் பேசுவதை பார்க்கும்போது, கட்சி மாறலாம் என தோன்றுகிறது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீனா ஜெயக்குமார் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

45
மீனா ஜெயக்குமார் திமுகவில் இருந்து விலகல்
Image Credit : Asianet News

மீனா ஜெயக்குமார் திமுகவில் இருந்து விலகல்

இதுதொடர்பாக மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வணக்கம். இன்று முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். மேலும் நான் இதுவரை பயணித்த இந்த அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

55
யார் இந்த மீனா ஜெயக்குமார்?
Image Credit : our own

யார் இந்த மீனா ஜெயக்குமார்?

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மீனா ஜெயக்குமார். அப்பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். திமுக மகளிரணி துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதையடுத்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் கட்சியில் இணைந்த அவருக்கு திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய போது மீனா ஜெயக்குமார் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
மு. க. ஸ்டாலின்
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tamilnadu Government: மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு.. எத்தனை காலி இடங்கள்? என்னென்ன தகுதிகள்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
Petrol Diesel Price Hike: அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.
Recommended image3
Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Related Stories
Recommended image1
Kayalvizhi Join TVK: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்தி தவெகவில்? யார் இந்த கயல்விழி? அதிர வைக்கும் பின்னணி
Recommended image2
Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved