ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவாரா? மும்பை இந்தியன்ஸ் அணியில் எப்போது இணைவார்?
ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 முதல் தொடங்கும் நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவாரா? என்பது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Jasprit Bumrah will Play IPL: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. மே 25ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து அணிகளும் களம் காண தயாராகி வருகின்றன. ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்த முறையும் பட்டத்தை வெல்ல தயாராக் இருக்கிறது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. ஜனவரியில் ஏற்பட்ட முதுகு காயத்திலிருந்து இப்போது குணமடைந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல்லில் விளையாடுவார் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
ESPNCricinfo-வின் படி, பும்ரா ஏப்ரல் மாத தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் தொடக்கத்தில் சில போட்டிகளை பும்ரா தவற விடுவதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு துறை பின்னடவை சந்தித்துள்ளது.
Axar Patel: ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டனாக அக்சர் படேல் நியமனம்!
ஜஸ்பிரித் பும்ரா காயம்
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியை அறிவிக்கும்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரை ஐந்து வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவ குழு கூறியது. அதன்படி அவர் இப்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
பும்ரா ஐபிஎல்லில் எத்தனை போட்டிகளில் விளையாடமாட்டார் என்பது உறுதியாக தெரியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 23 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், மார்ச் 29 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளில் பும்ரா இடம்பெற வாய்ப்பில்லை.
பும்ராவுக்கு அறிவுரை
ஆனால் காயத்தில் இருந்து மீண்டு விட்ட ஜஸ்பிரித் பும்ரா பல மாதங்கள் ஓய்வெடுத்த பிறகே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ''பும்ரா முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு மீண்டு வருகிறார். ஆகையால் அவர் தொடர்ச்சியாக டெஸ்ட்களில் விளையாடுவதையும், மற்ற போட்டிகளில் பங்கேற்பதையும் தவிர்க்க முடியும். ஏனெனில் முதுகுப் பகுதியில் மீண்டும் காயம் ஏற்பட்டால் பும்ரா மீள்வது கடினம்'' என்று நியூசிலாந்து முன்னாள் பாஸ்ட் பவுலர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார்.
தீவிர விஜய் ரசிகன்; ரூ.1400 சம்பளத்திற்கு சினிமாவில் நடித்த வருண் சக்கரவர்த்தி - அடடே இந்த படமா?