- Home
- Cinema
- மூன்றே படத்தில் 3300 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் இந்த நடிகை யார்?
மூன்றே படத்தில் 3300 கோடி வசூல்; பாக்ஸ் ஆபிஸில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் இந்த நடிகை யார்?
உலக அளவில், ரூ.3300 கோடி வசூலை அள்ளிய திரைப்படங்களில் நடித்து,பாக்ஸ் ஆபிசில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை யார் என்பதை பார்ப்போம்.

ஒரு திரைப்படத்தின் தோல்வி, எப்படி கதாநாயகனை விட கதாநாயகியை அதிகம் பாதிக்கிறதோ... அதே போல் தான், ஒரு படம் வெற்றி பெரும் போது, அந்த படத்தின் ஹீரோவுக்கு நிகராக கதாநாயகிக்கும் வரவேற்பை பெற்று தரும். ராசியான நாயகி என்கிற பட்டத்தை கொடுத்து, அந்த நடிகையை தங்களின் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள்.
28 வயதே ஆகும் ராஷ்மிகா மந்தனா
அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஹிந்தியில் அதிகம் வசூல் செய்த படங்களில் நடித்த நடிகை நடிகை என்கிற பெருமை 28-வயதே ஆகும் நடிகை ராஷ்மிகாவுக்கு கிடைத்துள்ளது. இவர் நடிப்பில் வெளியான அனிமல், புஷ்பா தி ரூல், மற்றும் சாவா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியதோடு வசூலிலும் வாகை சூடிய படங்களாக மாறின.
ராஷ்மிகாவை மிரட்டவில்லை; திடீரென அந்தர் பல்டி அடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!
உலக அளவில் ராஷ்மிகா நடித்த படங்கள் ரூ.3300 கோடி வசூல்
உலக அளவில் ராஷ்மிகா நடித்த படங்கள் ரூ.3300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான 'சாவா' திரைப்படம், இதுவரை ரூ.700 கோடி வரை வசூல் செய்துள்ளது. அதே போல் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில், அதிகம் வசூல் செய்த முதல் பாலிவுட் படம் என்கிற பெருமையும் 'சாவா' கைப்பற்றி உள்ளது.
அனிமல் திரைப்படம்
இதை தொடர்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு, சந்தீப் ரெட்டி வாங்க இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா நடித்த 'அனிமல்' திரைப்படம் ரூ. 900 கோடி வரை வசூல் செய்தது. புஷ்பா திரைப்படம் உலக அளவில் ரூ.1700 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பறந்த கடிதம் - பின்னணி என்ன?
3 படங்களில் சாதனை வசூல்
இதன் மூலம் ஹிந்தி திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, போன்ற நடிகைகள் செய்திடாத சாதனையை 3 படங்களின் மூலம் செய்து காட்டியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
பாலிவுட் படங்களில் மட்டும் 1850 கோடி வசூல்
மேலும் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து கடந்த ஆண்டு வெளியான புஷ்பா படம் ரூ.812 ரூபாய் இந்தியில் மட்டுமே வசூலித்துள்ளது. இதை தொடர்ந்து விக்கி கௌஷல் ஜோடியாக நடித்திருந்த வரலாற்று கதையாமசம் கொண்ட படமான, சாவா ஹிந்தியில் மட்டும் 503 கோடி வசூலையும், மற்றொரு படமான அனிமல், ரூ.532 கோடியும் வசூலித்துள்ளது. இதன் மூலம், பாலிவுட் திரையுலகில் ரூ.1850 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகையாக மாறியுள்ளார்.
விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்த ராஷ்மிகா மந்தனாவின் சாவா!
பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா
இதற்க்கு முன்பு பாலிவுட் திரையுலகை ஆண்டு கொண்டிருந்த, ப்ரியனா சோப்ரா, தீபிகா படுகோன், ஆலியா பட் போன்ற நடிகையாளின் வசூல் சாதனையை முறியடித்து விட்டு, பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் லேடி சூப்பர்ஸ்டாராக மாறியுள்ளார் ராஷ்மிகா என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் இந்த படங்கள் எல்லாமே ஹீரோ ஓரியன்டேட் படம் என்றாலுமே கூட.. கதாநாயகியாக இவர் நடித்திருப்பது இவருக்கு மிகப்பெரிய பிளஸ்சாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.