- Home
- Cinema
- தொலைக்காட்சி
- புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Karthik Finds Treasure Jewelry Revathi Released From Lock Up in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் 1140 ஆவது எபிசோடில் புதையல் நகைகளை கண்டுபிடித்த கார்த்திக் அதனை ஊர் பெரியவர்களிடம் ஒப்படைத்த நிலையில் ரேவதி லாக்கப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Karthik Finds Treasure Jewelry Revathi Released From Lock Up in Tamil
கார்த்திகை தீபம் சீரியலில் எப்படியோ கஷ்டப்பட்டு கார்த்திக் புதையல் நகைகளை கண்டுபிடித்து ஊர் பெரியவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அதோடு தனது மாமியார் சாமுண்டீஸ்வரிக்கும் இந்த நகை திருடு போனதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்று பார்க்கலாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியலில் 1140ஆவது எபிசோடானது கார்த்திக் காணாமல் போன புதையல் நகைகளை தேடும் காட்சியோடு தொடங்கியது.
Karthigai Deepam Serial
இதில், தனது அம்மாவின் சிலை இருக்கும் இடத்தில் புதையல் நகைகளில் ஒரு சில முத்து மணிகள் சிதறி கிடந்துள்ளன. அதோடு ஊசி பயன்படுத்தியதற்கான ஆதாரமும் அங்கு இருந்துள்ளது. அதை எடுத்து சென்று பல இடங்களில் விசாரித்து வீட்டு அட்ரஸும் வாங்கியுள்ளார். அதன் பிறகு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அம்மா சிலை இருக்கும் இடைத்திற்கு கையோடு கூட்டிச் சென்று நகையை பத்திரமாக மீட்டுள்ளார். ஆனால், நகையை மறைத்து வைத்த அந்த நபர் தப்பி ஓடும் போது விபத்திற்குள்ளாகியுள்ளார்.
Revathi and Karthik
அதன் பிறகு காணாமல் போன புதையல் நகைகளை கொண்டு வந்து ஊர் பெரியவர்களிடம் ஒப்படைத்தார். அதோடு தனது மாமியார் இந்த நகையை திருடவில்லை. அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டு தனது மனைவியை பார்க்க சென்றார். அங்கு எல்லா உண்மைகளையும் சொல்லி போலீஸ் லாக்கப்பிலிருந்து ரேவதியை அழைத்து வந்தார்.
Karthik Finds Treasure
வீட்டிற்குள் நுழையும் போது சாமுண்டீஸ்வரி அவர்களை தடுத்து நிறுத்துகிறார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் 1140ஆவது எபிசோடு முடிந்தது. அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி இன்றைய 1141ஆவது எபிசோடில் பார்க்கலாம். வீட்டிற்குள் நுழையும் போது சாமுண்டீஸ்வரி அவர்களை தடுத்து நிறுத்துகிறார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் 1140ஆவது எபிசோடு முடிந்தது. அடுத்து என்ன நடக்கிறது என்பது பற்றி இன்றைய 1141ஆவது எபிசோடில் பார்க்கலாம். இதற்கிடையில் எப்படி கார்த்திக் புதையல் நகையை எடுத்து வந்தான். அவனுக்கு எப்படி புதையல் இருக்கும் இடம் தெரியும் என்று சந்திரகலா தனது கணவர் சிவனாண்டியிடம் கேட்டார். மேலும், முத்துவேல் எப்படி கண்டுபிடித்தான் என்பது பற்றி விசாரிக்க நகையை மறைத்து வைக்க சொன்னவனிடம் சென்று கேட்க சென்றுள்ளார்.