வாக்கிங் போறப்ப இந்த '1' விஷயம் மட்டும் சரியா பண்ணா போதும்!! ஆய்வில் தகவல்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த 10 ஆயிரம் காலடிகள் நடப்பதை காட்டிலும், நடக்கும்போது சில விஷயங்களை பின்பற்றினாலே போதுமாம்.

Walking Speed vs Step Count : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நடைபயிற்சி அவசியமான ஒன்றாகும். ஒருவர் மனச்சோர்வு, பதற்றம் போன்ற உளவியல்ரீதியான பிரச்சினைகளிலிருந்து மீள நடைபயிற்சி உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நடைபயிற்சி உதவும். நடக்கும் போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
நடைபயிற்சி
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒரு நாளில் 10 ஆயிரம் காலடிகள் நடப்பதை விட பவர் வாக் மாதிரியான வேகமான நடைபயிற்சி செய்வது உடலுக்கு அதிக பலன்களை தரும் என கண்டறியப்பட்டுள்ளது. நாம் எவ்வளவு காலடிகள் நடக்கிறோம் என்பதை விட எவ்வளவு வேகமாக நடக்கிறோம் என்பது தான் உடலுக்கு தேவையாக இருக்கிறது.
இதையும் படிங்க: மூட்டுகளை வலுவாக்க சூப்பர் வாக்கிங் 'ட்ரிக்' வெறும் 100 காலடிகளில் 1000 காலடிகளின் பலன்!!
ஆய்வில் தகவல்;
இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகள் ஒரு நாளுக்கு பத்தாயிரம் காலடிகள் நடப்பதன் மூலம் டிமென்ஷியா, இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோய்களின் இறப்பு அபாயத்தை குறைப்பதில் தொடர்புடையது என தெரியவந்தது. தற்போது சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகம் செய்த ஆய்வுகளின் முடிவுகளில் பவர் வாக் (ஆற்றல் வாய்ந்த நடை) என்ற வேகமான நடைபயிற்சியில் அதிக நன்மைகள் கிடைப்பதை உறுதிசெய்துள்ளது. காலடிகளைவிட வேகமே முக்கியம்.
இதையும் படிங்க: மாதவிடாய் நின்ற பெண்கள் ஏன் கண்டிப்பாக வாக்கிங் செல்லனும்? ஆய்வின் வந்த தகவல்!
இலக்கு:
ஒவ்வொரு தனிநபரும் ஒரு நாளுக்கு பத்தாயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என்பது இலக்காக எடுத்துக் கொள்ளாமல் தினமும் வேகமாக நடப்பதை இலக்காக கொள்ளவேண்டும். வேகமாக நடக்காமல் மிதமான சுறுசுறுப்புடன் நடப்பவர்களுக்கும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தினமும் 3,800 காலடிகள் நடப்பவர்கள் டிமென்ஷியா நோய் அபாயத்தில் இருந்து 25% தப்பலாம் என ஆய்வு காட்டுகிறது.
நடைபயிற்சி
ஒருவர் ஒவ்வொரு 2 ஆயிரம் காலடிகள் நடக்கும்போதும் அகால மரணம் அடையும் அபாயத்தை 8-11 சதவீதம் குறைக்கும் சாத்தியம் உள்ளது. நடப்பதால் புற்றுநோய் பாதிப்பு குறைவது, இதய நோய்கள் கட்டுக்குள் வருவதும் ஆய்வில் தெரிய வந்தன. அதிகமான காலடிகள் நடக்கும்போது டிமென்ஷியா வரும் வாய்ப்பு கணிசமாக குறையும். தினமும் 9,800 காலடிகள் நடந்தால் டிமென்ஷியா வராமல் இருக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது.