மாதவிடாய் நின்ற பெண்கள் ஏன் கண்டிப்பாக வாக்கிங் செல்லனும்? ஆய்வின் வந்த தகவல்!
மாதவிடாய் நின்ற பின்னர் பல பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பதிவில் அவர்களின் இறப்பு அபாயத்தை குறைய வாக்கிங் எவ்வாறு உதவுகிறது என காணலாம்.

Walking and Postmenopausal Health : மாதவிடாய் நின்ற பிறகு சில பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களுடைய இறப்பு வாய்ப்பினை தடுக்க நடைபயிற்சி உள்ளிட்ட மிதமான உடற்செயல்பாடுகள் செய்வது முக்கியம் என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
walking benefits
தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் அடிகள் வரை நடந்தாலே நல்ல பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் இறப்பு ஆபத்து 40 சதவீதம் குறைந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு நாளில் கூடுதலாக நடக்கும் ஒவ்வொரு 2,500 காலடிகளும் இதய நோயின் அபாதத்தை 34% குறைவதை காட்டியுள்ளது ஆய்வு. சிலர் புற்றுநோயில் தப்பி இதய நோயால் இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை தடுக்க நடைபயிற்சி உதவுகிறது.
walking benefits
அமெரிக்க இதய சங்கத்தின் தகவல்களின்படி, உடற்பயிற்சி என்பது இதய நோய்களின் சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பின் கட்டாயம் செய்ய வேண்ட மீட்பு பணியாகும். புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்கள் உடற்பயிற்சி செய்வது இதய நோய் அபாயங்களை குறைக்க உதவும்.
இதையும் படிங்க: தினமும் 'எவ்வளவு' தூரம் வாக்கிங் போகனும்? வயதிற்கேற்ற வாக்கிங் டிப்ஸ் தெரியுமா?
walking benefits
புற்றுநோய் வந்த பின்னர் நீண்ட நாள் வாழ்வது தொடர்பான மாதவிடாய் நின்ற பெண்களின் வாழ்க்கை முறையை, உடல் செயல்பாடுகள், நடத்தைகள் மூலம் தெரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவுகிறது. இந்த ஆய்வில் மார்பகம், எண்டோமெட்ரியல், பெருங்குடல், நுரையீரல், சிறுநீர்ப்பை, மலக்குடல், கருப்பை, சிறுநீரகம் ஆகிய புற்றுநோய்கள் பாதிப்புள்ள 63 முதல் 99 வயதுக்குட்பட்ட 2,500 பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் மாதவிடாய் நின்ற பெண்களாவர். இந்த ஆய்வில் 8 ஆண்டுகளாக அவர்களின் உடற்செயல்பாட்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இவர்கள் தினமும் மிதமான முதல் தீவிரமான உடல் செயல்பாடுகள் குறைந்தது 1 மணிநேரமாவது செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இதனால் இறப்பு அபாயம் 40%, இதய நோய் இறப்பு அபாயம் 60% குறைந்தது.
walking benefits
தினமும் 1 மணி நேரத்திற்கு குறைவாக நடந்தாலும் உடலில் நோய் ஆபத்துகள் குறைவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு நாளில் 102 நிமிடம் அமர்ந்திருப்பது மற்ற காரணங்களால் இறப்பு அபாயத்தை 12% அதிகரிக்கிறது. இதய நோயின் இறப்பு அபாயத்தை 30% அதிகரிக்கிறது. இந்த ஆபத்துகளை குறைக்க நடைபயிற்சி உதவுகிறது.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் வாக்கிங் செல்லனும் தெரியுமா?
walking benefits
ஆய்வில் கலந்து கொண்டவர்கள் தினமும் 5 ஆயிரம் காலடிகளுக்கு. குறைவாக நடந்தாலும் கூட அவர்களின் உடலில் கணிசமான முன்னேற்றம் இருந்துள்ளது. இது ஒரு நாளைக்கு நடக்கவேண்டிய இலக்கான பத்தாயிரம் காலடிகளின் பாதியாகும். ஆகவே நடைபயிற்சியை பெண்கள் தங்கள் வாழ்வின் அங்கமாக கொள்ள் வேண்டியது அவசியம். அதுவே அவர்களை நோயிலிருந்து காக்கும் அஸ்திரம்.