தினமும் 'எவ்வளவு' தூரம் வாக்கிங் போகனும்? வயதிற்கேற்ற வாக்கிங் டிப்ஸ் தெரியுமா?
ஒவ்வொரு நாளும் நடக்க வேண்டிய தூரம் என்பது வயதினையும் பொறுத்தது. அது குறித்து விரிவாக காணலாம்.

How Many Kilometers To Walk A Day : அனைத்து தரப்பினரும் செய்யக்கூடிய எளிய பயிற்சி என்றால் அது நடைபயிற்சிதான். தினமும் நடைபயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவர்களுக்கு இதய நோய் வரும் அபாயம் குறைவாக உள்ளது. ஆனால் வயதுக்கு ஏற்றபடி வாக்கிங் செல்வது குறிப்பிட்ட பலன்களை அதிகரிக்கிறது. ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு தூரம் ஒரு நாளுக்கு நடக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரியவர்கள் நடக்க வேண்டிய தொலைவு:
பெரியவர்கள் தினமும் 10,000 காலடிகள், தோராயமாக சொல்ல வேண்டுமென்றால் 8 கிலோமீட்டரை இலக்காக கொண்டு நடக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களால் முடிந்தவரை நடக்க வேண்டும். ஆனால் கட்டாயம் தினமும் நடக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வயதுக்கேற்ற வாக்கிங்:
6–17 வயது குழந்தைகள்: குழந்தைகள் உடற்செயல்பாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 60 நிமிடங்கள் நல்ல சுறுசுறுப்புடன் விளையாடுவதை பழக்கப்படுத்த வேண்டும்.
பெரியோர்:
தினமும் 10 ஆயிரம் காலடிகள் அல்லது 8 கிமீ நடைபயிற்சி செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய இலக்கை ஒரே நாள அடைய வேண்டாம். படிப்படியாக முயற்சிய் செய்யலாம். அதாவது 1000 காலடிகளில் தொடங்கி படிப்படியாக உயர்த்தலாம்.
இதையும் படிங்க: வாக்கிங்ல பலர் செய்யும் '5' தவறுகள்.. இனி ஒருபோதும் பண்ணாதீங்க!!
முதியோர்:
ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 3 கிமீ வரை இலக்கு வைத்து நடக்கலாம். அதிகபட்சம் 4 கிலோமீட்டர் வரை நடக்கலாம். குறைந்தபட்சம் ஒவ்வரு வேளையும் சாப்பாட்டுக்கு பின்னர் 10 நிமிடங்கள் குறுநடை போடலாம். இதனால் நாள்பட்ட நோய்களின் அபாயங்கள் குறையும்.
இதையும் படிங்க: 40 வயதுக்கு மேல் 'ஏன்' ஆண்கள் கட்டாயம் வாக்கிங் போகனும்? இது தான் காரணம்!!
நடைபயிற்சியின் நன்மைகள்:
- கெட்ட கொழுப்பு கரைந்து எடை கட்டுக்குள் இருக்கும். எடையை குறைக்க எளிய மற்றும் சிறந்த பயிற்சியாகும்.
- உயர் ரத்த அழுத்தத்தைம் குறைத்து இதய ஆரோக்கியம் மேம்பட உதவும்.
- எலும்புகளை வலுவாக்கும். எலும்பு ஆரோக்கியத்தை மோசமாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
- மனச்சோர்வை குறைத்து மன அழுத்தம் வராமல் தடுக்கிறது. மனநிலையை சீராக்கும்.
- மாலை மற்றும் இரவு நேர நடைபயிற்சி தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்யும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
- சர்க்கரை நோயாளிகள் தினமும் நடப்பதால் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.
- கால் தசைகள் வலுவாகும். கணுக்கால்கள், மூட்டுகள் உறுதியாகும். முதுகு வலி, மூட்டு வலி நிவாரணம் கிடைக்கும்.