40 வயதுக்கு மேல் 'ஏன்' ஆண்கள் கட்டாயம் வாக்கிங் போகனும்? இது தான் காரணம்!!
நடைப்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

Walking For Men Over 40 : நடைபயிற்சி அனைத்து வயதினருக்கும் நன்மைகளை வாரி வழங்கும் எளிமையான பயிற்சியாகும். இதை ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் செய்யலாம். இருவருக்கும் அதற்கேற்ற பலன்கள் கிடைக்கின்றன. அதிலும் 40 வயதிற்குப் பின், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு நாளில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபயிற்சி செய்தால் அவர்களுடைய இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிச்சுமை போன்ற மன அழுத்த காரணிகளில் இருந்து விடுபட உதவுகிறது. நடைபயிற்சி உடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. வயதாகும் போது ஏற்படும் நாள்பட்ட நோய்களை தடுக்க உதவுகிறது. சீரான வாழ்க்கை முறையின் அங்கமாக நடைபயிற்சி உள்ளது. எடை குறைப்பு முதல் ஆண்களுக்கு நடைபயிற்சியினால் கிடைக்கும் நன்மைகாலை இந்த பதிவில் காணலாம்.
இதய ஆரோக்கியம்:
நடைப்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு இதய நோய் அபாயம் குறைகிறது. ஏனென்றால் அவர்களுடைய ரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது.
மன ஆரோக்கியம்:
தொடர்ந்து நடைப்பயிற்சி செய்வதால் மன அழுத்தம் படிப்படியாக குறைக்கிறது. மனச்சோர்வு நீங்கி மனநிலையை மேம்படும். ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
இதையும் படிங்க: வாக்கிங்ல பலர் செய்யும் '5' தவறுகள்.. இனி ஒருபோதும் பண்ணாதீங்க!!
எடை மேலாண்மை:
தினமும் நடைப்பயிற்சி செய்தால் அதிக கலோரி எரிக்கப்படும். இதனால் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரை நோய்:
நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இன்சுலின் உணர்திறன் மேம்படும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்பட்டு, சர்க்கரை நோயும் கட்டுப்படுத்த உதவுகிறது.
வலுப்பெறும் எலும்பு, மூட்டுகள்:
நடைப்பயிற்சி செய்வதால் எலும்புகளின் அடர்த்தி அதிகமாகும். மூட்டு வலியால் அவதிப்பட்டால் நடைபயிற்சி செய்வது நல்லது.
இதையும் படிங்க: வாக்கிங் vs ரன்னிங்- பெண்கள் நடைபயிற்சிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கனும்?
நடைபயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை:
- நீங்கள் நடைபயிற்சிக்கு செய்வதற்கு புதியவராக இருந்தால் முதலில் உங்களுடைய மருத்துவர் அல்லது பயிற்சியாளரிடம் தகுந்த ஆலோசனை பெறுவது அவசியம்.
- ஒரே நாளில் இமயமலையை தொட முடியும் என்பது தன்னம்பிக்கையாக இருந்தாலும், நடைபயிற்சி பொருத்தவரை படிப்படியாக முன்னேறுவது தான் நல்லது. முதலில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்கத் தொடங்கலாம். பின்னர் அதனை படிப்படியாக உயர்த்தலாம்.
- நடைபயிற்சி செய்வதற்கு பொருத்தமான காலணிகளை அணிவது அவசியம். அதில் கவனம் செலுத்த வேண்டும்.
- வியர்வை உறிஞ்சக்கூடிய காட்டன் துணிகளை அணிந்து நடைபயிற்சி செய்யுங்கள். நீரிழப்பை தடுக்க தண்ணீர் குடியுங்கள்.
- காலை அல்லது சூரியன் மறைந்த பின்னர் மாலை வெயில் இல்லாத நேரங்களில் நடைபயிற்சி செய்வது நல்லது.
- நடக்கும் போது தரையை பார்த்தபடி நடக்கக்கூடாது. நேராக பார்த்து கைகளை வீசி சரியான தோரணையில் நடைபயிற்சி செய்ய வேண்டும்.