ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் வாக்கிங் செல்லனும் தெரியுமா?
ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் வாக்கிங் செல்ல வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

How Many Days A Week Should You Walk : நடைபயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியம் தருகிறது. கொரோனாவுக்கு பின்னான காலகட்டங்களில் மக்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினார்கள். அதன் விளைவாக நடைபயிற்சி, உடற்பயிற்சி என உடற்செயல்பாடுகளை செய்ய தொடங்கினார்கள். அதிலும் நடைபயிற்சி செய்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தப் பதிவில் ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் நடக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
ஒரு வாரத்திற்கு எத்தனை நாட்கள் நடக்க வேண்டும்?
அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு வாரமும் சுமார் 150 நிமிடங்கள் மிதமான மற்றும் தீவிரமாம ஏரோபிக் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்கிறது. இந்த நிமிடங்களை நிறைவு செய்ய வாரத்தில் ஐந்து நாட்கள் முறையே ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். அதை அப்படியே செய்ய வேண்டும் என்றில்லை. இதற்கு இன்னொரு சாதகமான வழியும் உண்டு.
எப்படி எளிமையாக 150 நிமிடங்களை நிறைவு செய்யலாம்?
இந்த 150 நிமிடங்களை வாரம் முழுக்க சிறு பகுதிகளாக பிரித்து நடக்கலாம். காலை 15 நிமிடங்கள், மாலை 15 நிமிடங்கள் நடக்கலாம். சாப்பிட பின்னர் 10 நிமிடங்கள் முறையே காலை, மதியம், இரவு என மூன்று நேரங்களிலும் நடக்கலாம். இதனால் வாரத்தில் 150 நிமிடங்கள் என்ற இலக்கை எளிதில் நிறைவு செய்யலாம்.
இதையும் படிங்க: தினமும் 'எவ்வளவு' தூரம் வாக்கிங் போகனும்? வயதிற்கேற்ற வாக்கிங் டிப்ஸ் தெரியுமா?
மற்ற பயிற்சிகள்:
நடைபயிற்சியுடன் கூடுதல் பலன்கள் கிடைக்க படியேறும் பழக்கத்தை பின்பற்றுங்கள். அலுவலகங்களில் லிஃப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் ஏறலாம். வீட்டு படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி பயிற்சி செய்யலாம்.
இதையும் படிங்க: 40 வயதுக்கு மேல் 'ஏன்' ஆண்கள் கட்டாயம் வாக்கிங் போகனும்? இது தான் காரணம்!!
நடைபயிற்சி நன்மைகள்
- இதய ஆரோக்கியம் சிறப்பாக மேம்படுத்தவும். இரத்த ஓட்டம் சீராகும்.
- கீழ் உடலுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும். இதனால் எலும்புகள் உறுதியாகும்.
- உடலில் உள்ள கெட்டக் கொழுப்பைக் குறைக்க உதவும்.
- தசைகள் வலிமையாகும். உடலில் சகிப்புத்தன்மை உருவாக காரணமாக அமையும்.
- ஏற்கனவே இதய நோய், வகை 2 நீரிழிவு நோய், ஆஸ்டியோபோரோசிஸ், சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய் உள்ளவர்களின் நோய் தாக்கம் குறையும்.
- வயதாகும்போது ஏற்படுகிற நாள்பட்ட நோய்களை தடுக்க முடியும்.