மூட்டுகளை வலுவாக்க சூப்பர் வாக்கிங் 'ட்ரிக்' வெறும் 100 காலடிகளில் 1000 காலடிகளின் பலன்!!
நடைபயிற்சிக்கு நடுவே செய்யும் சிறுமாற்றம் உங்களுடைய மூட்டுகளுக்கு எவ்வாறு நன்மை செய்யும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Retro Walking For Knee Strengthening : நடைபயிற்சி என்பது அனைத்து உடற்பயிற்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள எளிய பயிற்சியாகும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேணக் கூடிய சிறந்த பயிற்சி. ஒரு நாளில் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நடந்தால் கூட உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு காலடியும் உடல் நலனுக்கு தேவையானது.

நடைபயிற்சி
நடைபயிற்சியில் செய்யும் சிறுமாற்றம் கூட அதிக கலோரிகளை எரிக்க உதவும். குறிப்பாக ஒவ்வொரு மாற்றங்களும் ஒவ்வொரு வகையான நன்மைகளை தரக் கூடியவை. உதாரணமாக நடைபயிற்சிக்கு நடுவே படியேறுதல் உங்களுடைய இதயத் துடிப்பை அதிகமாக்கும். அதிகமான ஆற்றலை பயன்படுத்துவதால் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடை கட்டுக்குள் இருக்கும். அதைப் போலவே எந்த மாற்றம் உங்களுடைய மூட்டுகளை வலுவாக்க உதவும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
பின்னோக்கி நடத்தல்:
பின்னோக்கி நடப்பது மக்களிடையே பரவலாக பின்பற்றப்படாத நடைபயிற்சி முறையாகும். இது பொதுவாக குழந்தைகளுக்கு பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் ஒன்றாகவே இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனென்றால் பின்னோக்கி நடப்பது எளிதான செயல் அல்ல. அதற்கு உடலில் சமநிலை தேவைப்படுகிறது. இது சவாலான பயிற்சியாகும். ஆனால் இதை செய்வதால் மூட்டுகள் வலுவாகின்றன என்பது மறுக்க முடியாதது.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் வாக்கிங் செல்லனும் தெரியுமா?
பின்னோக்கி நடப்பதன் சிறப்பு:
முன்னோக்கி நடப்பதை விடவும் பின்னோக்கி நடப்பதில் பல நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் தினமும் முன்னோக்கி மட்டுமே நடப்பது மிகப்பெரிய தவறு. பின்னோக்கி நடப்பதை நிச்சயம் நாம் பழக்கப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் முன்னோக்கி நடப்பதை விடவும் பின்னோக்கி நடப்பது மிகவும் கடினம். நீங்கள் பின்னோக்கி 100 காலடிகள் நடந்தாலும் 1000 காலடிகள் முன்னோக்கி நடந்ததற்கு சமமான பலன்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க: மாதவிடாய் நின்ற பெண்கள் ஏன் கண்டிப்பாக வாக்கிங் செல்லனும்? ஆய்வின் வந்த தகவல்!
அனுபவ பகிர்வு:
இன்ஸ்டாகிராமில் பிரபலமான மைக்கோலாபிட்னஸ் (Mikecolafitness) பின்னோக்கி நடப்பதன் பலன்களை பகிர்ந்துள்ளார், அதில் தினமும் அவர் 10 முதல் 20 நிமிடங்கள் நடப்பதாகவும் அதனால் மோசமான அவருடைய மூட்டுகள் இப்போது உறுதியானதை உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அவர் பின்னோக்கி நடப்பதை தன் வழக்கமாக்கி கொண்டுள்ளார்.
பின்னோக்கி நடப்பது எவ்வாறு உதவுகிறது?
பின்னோக்கி நடக்கும்போது மூட்டுகள் சற்று நீட்சி அடைகிறது. கால்கள் முழு இயக்கத்தை உணருகின்றன. இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி கவனத்தை ஒருநிலைப்படுத்தி நடக்கிறோம் என்பதால் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும். வயதாகும்போது ஏற்படும் தடுமாற்றத்தை தவிர்த்து உடலுக்கு சமநிலையை தர இந்த நடைபயிற்சி உதவும்.