- Home
- Cinema
- இன்சல்ட் செய்த நயன்தாரா; மூஞ்சில் அடித்தது போல் பதிலடி கொடுத்த மீனா! பற்றி எரியும் புது சர்ச்சை!
இன்சல்ட் செய்த நயன்தாரா; மூஞ்சில் அடித்தது போல் பதிலடி கொடுத்த மீனா! பற்றி எரியும் புது சர்ச்சை!
'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் பூஜை விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனாவை, நடிகை நயன்தாரா இன்சல்ட் செய்ததாக எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து மீனா மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியவத்தும் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
1 கோடியில் போடப்பட்ட செட்
அந்த வகையில் தற்போது, இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அண்மையில், 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கான பூஜை மிக பிரம்மாண்டமாக நடந்தது. இதற்காக 1 கோடியில் பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு பூஜை போட்டார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
லைவாக நடந்த படப்பிடிப்பு
அதே போல் முதல் முறையாக லைவாக மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. அப்படி எடுக்கப்பட்ட இந்த காட்சி படத்தில் இடம் பெறும் என்றும் கூறப்பட்டது. இந்த பிரமாண்ட பூஜையில், 'மூக்குத்தி அம்மன் 2' பட இயக்குனர் சுந்தர் சி மற்றும் நயன்தாரா தவிர, மீனா, குஷ்பு, ரெஜினா கஸாண்ட்ரா, யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், ஐசரி கணேஷ், ஹிப்ஹாப் ஆதி, மத்திய அமைச்சர் எல் முருகன் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை
இந்த நிலையில் தான் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நிகழ்ச்சியில் நயன்தாரா ஓவராக ஆட்டிடியூட் காட்டியதாகவும், நடிகை மீனாவை அவர் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் மீது அடுக்கடுக்கான விமர்சனம் எழுந்தது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருந்தவர் தான் நடிகை மீனா. எத்தனையோ ஹிட் படங்களிலும், அம்மன் படங்களிலும் நடித்துள்ளார்.
45 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கும் மீனா
குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்த மீனா, பின்னர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அஜித் என்று ஏராளமான மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். எந்தவித ஆபாசமும் இல்லாமல், ஹோம்லி லுக்கில் நடித்து அசத்தியவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் 'மூக்குத்தி அம்மன் 2' நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து மீனாவிற்கு ஒரு ஹாய் கூட நயன்தாரா சொல்லவில்லை என கூறப்பட்டது.
குஷ்பூவுக்கு கிடைத்த மரியாதை மீனாவுக்கு கிடைக்கவில்லை
குஷ்பு மற்றும் மீனா இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்தனர். அப்போது குஷ்புவை கட்டியணைத்த நயன்தாரா, மீனாவிடம் ஒரு வார்த்தை கூச பேசவில்லை. சிறு புன்னகை கூட செய்யவில்லை. இதனால் நயன்தாரா ஓவராக ஆட்டிடியூட் காட்டுவதாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. இருவரும் ஒன்றாக அருகருகில் இருந்த போதிலும் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை.
பிரம்மாண்டமாக நடந்த நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 பூஜை! படத்தில் இத்தனை பிரபலங்களா?
நயன்தாராவுக்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள்
இதனால் நயன்தாரா ஒரு சீனியர் நடிகை என்று கூட பார்க்காமல் மீனாவிடம் ஓவர் ஆட்டிடியூட் காட்டுகிறார் என்று விமர்சனம் எழுந்தது. இதற்கு நயன்தாரா ரசிகர்கள் இல்லை இல்லை அப்பட்டி பேசாதிர்கள். நயன் மற்றும் மீனா இருவரும் பேசினார்கள் என்று அவருக்கு ஆதரவராக கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தான் மீனா, நயன்தாராவிற்கு மறைமுகமாக... அதுவும் மூஞ்சில் அடித்தது போல் பதிலடி கொடுத்துள்ளார்.
மீனாவின் இன்ஸ்ட்டா ஸ்டோரி பதிவு:
தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நிறைய ஆடுடன் இருக்கும் சிங்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், எப்போதும் தனியாக இருக்கும் சிங்கம் ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது, என்ன சொல்கிறது என்று எதைப்பற்றியும் கவலைப்படாது என வார்த்தைகள் அதில் இடம்பெற்றுள்ளது. மேலும் உங்களது நல்ல உள்ளத்தை மட்டும் எண்ணி பெருமை கொள்ளுங்கள். எல்லோரிடமும் அது இருக்காது என்று மற்றொரு பதிவும் போட்டுள்ளார்.
இந்த ரெண்டு ஸ்டோரியையும் மீனா, நயன்தாராவை குறிப்பிட்டு தான் பதிவிட்டிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே நயன்தாரா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்கு முன்னதாக தனுஷின் பட விவகாரம், பொது நிகழ்ச்சியில் கை கொடுக்க மறுப்பு என்று பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்... அந்த லிஸ்டில் தற்போது இந்த பிரச்னையும் இணைந்துள்ளது.
தனுஷை தொடர்ந்து நயன்தாராவுக்கு வில்லனாகும் அருண் விஜய்; அதுவும் இவர் டைரக்ஷன்லயா?