MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கோமதியை பகடைக் காயாக பயன்படுத்தும் தாய் கிழவி... ஈகோவை தூக்கி எறிவாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

கோமதியை பகடைக் காயாக பயன்படுத்தும் தாய் கிழவி... ஈகோவை தூக்கி எறிவாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி கோவிலுக்கு சென்றதை பயன்படுத்தி, அவர் தொலைந்துபோனதாக கதை கட்டுகிறார் காந்திமதி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 16 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, மீனா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் காந்திமதிக்கு மட்டும் தான் தெரியும். அதுமட்டுமின்றி கோமதி வீட்டிலேயே போனை மறந்து வைத்துச் சென்றிருக்கிறார். அந்த போனை எடுத்து சைலண்டில் போட்டு வைத்த காந்திமதி, கோமதி வீட்டில் இல்லாத சூழலை பயன்படுத்தி அவரையும் பாண்டியனையும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என திட்டம்போட்டு இருக்கிறார். இதற்காக வீட்டில் ஒரு டிராமாவை போட்டு்ள்ளார் காந்திமதி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
பாண்டியனிடம் போன் போட்டு பேசிய கதிர்
Image Credit : jiohotstar

பாண்டியனிடம் போன் போட்டு பேசிய கதிர்

காந்திமதி தன் மகளை காணவில்லை என சொல்லி புலம்பிக் கொண்டிருக்க, அப்போது கதிர், பாண்டியனுக்கு போன் போட்டு அம்மா கடைக்கு வந்தாங்களா என கேட்கிறார். அதற்கு பாண்டியன் இல்லை என சொல்ல, அம்மாவை காலையில் இருந்து காணோம் என சொல்கிறார். இதைக்கேட்டு பதறிப்போன பாண்டியன், உடனடியாக சரவணனிடம் விஷயத்தை சொல்லி, கடையை பூட்டிவிட்டு விறுவிறுவென வீட்டுக்கு கிளம்பிச் செல்கிறார். அங்கு போனதும் காந்திமதி என் பொண்ணை காணவில்லை என ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அவ எங்கயாவது கோவிலுக்கு போயிருப்பா, வந்திருவா என கூறுகிறார் பாண்டியன்.

Related Articles

Related image1
கோமதி போனை அபேஸ் பண்ணிய காந்திமதி... பாட்டியின் பலே திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related image2
மீனாவின் பிளான் சொதப்பல்... கோமதியிடம் சண்டைபோட்ட பாக்கியம்; அதிர்ச்சியில் மயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
35
உஷாரான காந்திமதி
Image Credit : jiohotstar

உஷாரான காந்திமதி

இதையடுத்து பேசும் கதிர், அம்மாவை கோவிலில் தேடி பார்த்தாச்சு, எங்குமே இல்லை என சொல்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் செந்திலும் அங்கு வருகிறார். அவரும் அம்மா காணாமல் போன விஷயம் தெரிந்து ஷாக் ஆகிறார். அப்போது அவ மீனா கூட எங்கயாச்சும் போயிருக்காளானு போன் போட்டு கேளு என கூறுகிறார் பாண்டியன். உடனே ராஜி நான் போன் போடுகிறேன் என சொல்லிவிட்டு வெளியே செல்ல, மீனாவுக்கு போன் போட்டால் நம்முடைய பிளான் சொதப்பிவிடுமே என்கிற பயத்தில், வெளியே சென்று ராஜியின் போனை வாங்கிவிட்டு, அவரை உள்ளே அனுப்பும் காந்திமதி, மீனாவிடம் எதுவும் நடக்காதது போல் பேசுகிறார்.

45
சீறும் கதிர் மற்றும் செந்தில்
Image Credit : jiohotstar

சீறும் கதிர் மற்றும் செந்தில்

பின்னர் உள்ளே சென்று, மீனா கூடவும் கோமதி இல்லை என பொய் சொல்லிவிடுகிறார் காந்திமதி. இதையடுத்து பாண்டியனை ரவுண்டு கட்டும் கதிர் மற்றும் செந்தில், அம்மா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்கனு பேசாம இருக்கீங்க, நாங்க இப்போ நல்லா தான் இருக்கோம். எதுக்கு உங்க ஈகோவை தூக்கிப் போட மாட்டேங்குறீங்க. இப்போ உங்களால் தான் என்னுடைய அம்மா இந்த வீட்டை விட்டு போயிட்டாங்க என திட்டுகிறார். அருகில் இருந்த செந்திலும் தன் பங்கிற்கு ஏற்கனவே என்னைய இந்த வீட்டை விட்டு வெளிய அனுப்புனீங்க, இப்போ எங்க அம்மாவை அனுப்பீட்டிங்களா என திட்டுகிறார்.

55
பாட்டியின் பிளான் சக்சஸ் ஆகுமா?
Image Credit : jiohotstar

பாட்டியின் பிளான் சக்சஸ் ஆகுமா?

நாங்க ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணியதால் இப்போ சந்தோஷமாக இருக்கோம். நீங்களும் உங்க விருப்பப்படி சரவணன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிவச்சீங்க, இப்போ அவரோட வாழ்க்கை எப்படி இருக்கு, நியாயமா பார்த்தா நீங்க தான் இந்த வீட்டை விட்டு போயிருக்கணும் என காட்டமாக பேசுகிறார். அப்போது குறுக்கிடும் காந்திமதி, பழைய பிரச்சனைகளை விடுங்கடா, இப்போ கோமதி காணாமல் போனதை பத்தி மட்டும் பேசுங்க என சொல்லி அவர்களை தன் ரூட்டுக்கு கொண்டுவருகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
அக்காவின் காலில் விழுந்து கதறிய சந்திரகலா! கார்த்திக்கை பழிவாங்க புதிய 'செண்டிமெண்ட்' டிராமா - 'கார்த்திகை தீபம்' பரபரப்பு திருப்பம்!
Recommended image3
பாண்டியன் - கோமதியைச் சேர்த்து வைக்க காந்திமதி போட்ட 'மாஸ்டர் பிளான்';2 மாசம் டைம்; ரூ.10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்!
Related Stories
Recommended image1
கோமதி போனை அபேஸ் பண்ணிய காந்திமதி... பாட்டியின் பலே திட்டம் ஒர்க் அவுட் ஆகுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
மீனாவின் பிளான் சொதப்பல்... கோமதியிடம் சண்டைபோட்ட பாக்கியம்; அதிர்ச்சியில் மயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved