சுவைக்காக மண்பானைல சமைக்குறப்ப 'இந்த' தவறுகளை பண்ணாதீங்க!!
மண்பானையில் சமைக்கிறீர்கள் என்றால் அதை எப்படி கையாள வேண்டும் என்பதை குறித்து இங்கு காணலாம்.

Tips and Tricks for Cooking in a Mud Pot : நம்முடைய தாத்தா, பாட்டி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்களின் உணவு முறை மட்டுமல்லாமல் சமையல் முறையும் தான் காரணம். ஆம், அவர்கள் மண்பானையில் தான் சமைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், காலம் மாறிய பிறகு மண் பானையில் சமைப்பது குறைந்துவிட்டது. தற்போது மண்பானையில் சமைத்து சாப்பிடுவது மீண்டும் பிரபலமாகியுள்ளது. மண்பானையில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஆனால், மண்பானையில் சமைக்கும் போது சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அவை உடைந்துவிடும். சரி, இப்போது மண்பானையில் சமைக்கும் போது அதை கையாளுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மண்பாண்டங்களை தனியாக வை!
நீங்கள் பயன்படுத்தும் மண்பாண்டங்களை பிற பாத்திரங்களுடன் வைக்காமல் தனியாக தான் வைக்க வேண்டும். இல்லையெனில் அவை எளிதில் உடைந்து விடும் அல்லது விரிசல் ஏற்படும். நீங்கள் மண்பானைகளுக்கு என ஒரு தனி இடத்தை உருவாக்குங்கள். முக்கியமாக மண்பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டாம்.
மரக்கரண்டிகளை பயன்படுத்துங்கள்:
மண் பாத்திரங்களில் சமைக்கும் போது உலோக கரண்டிகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அவை மண் பாத்திரத்தில் உட்புறத்தில் சேதத்தை ஏற்படுத்தும். அதாவது கீறலை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக நீங்கள் மரக்கரண்டிகளை பயன்படுத்துங்கள் அதுதான் நல்லது.
இதையும் படிங்க: தெரு தெருவாய் மண்பானையை தேடும் கோடீஸ்வரர்கள்...!
சோப்பு பயன்படுத்தாதே!
மண் பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது சோப்பு, உலோக ஸ்கர்ப்பர் பயன்படுத்த வேண்டாம். சோப்பு போட்டு கழுவினால் அது உணவு மாசுபாட்டின் அபாயத்தை அதிகரிக்கும். அதற்கு பதிலாக நீங்கள் பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தேங்காய் நார்க் கொண்டு சுத்தம் செய்யலாம்.
உலர்ந்த இடத்தில் வை!
மண் பானையை சுத்தம் செய்த பிறகு அதை உணர்த்துவதற்கு சரியான இடத்தில் வைக்க வேண்டும். எந்தவித ஈரமும் இல்லாத இடத்தில் அதை காய வைக்க வேண்டும். இல்லையெனில் பாத்திரம் முற்றிலும் அழியும். எனவே மண் பாத்திரத்தை நன்கு உலர்ந்த இடத்தில் வையுங்கள்.
இதையும் படிங்க: புதிய மண் பானையை பயன்படுத்துவதற்கு முன் இதை எல்லாம் செய்ய வேண்டும்!
சிட்ரிக் உணவுகளை சமைக்காதே!
மண்பானைகளில் சிட்ரில் உணவுகள் சமைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிட்ரிக் அமிலம் மண்ணுடன் வினைபுரிந்து, சமைக்கும் உணவின் சுவையை பாதிக்கும்.
குறைந்த வெப்பத்தில் சமைக்கவும்!
பிற சமயல் பாத்திரங்களை போல கையாளாமல் மண் பாத்திரங்களை குறைந்த வெப்பத்தில் தான் சமைக்க வேண்டும். அதிக வெப்பத்தில் ஒருபோதும் சமைக்க கூடாது. குறைந்த வெப்பத்தில் சமைக்கும் போது சமையலை மெதுவாக்கும் மற்றும் தனித்துவமான சுவையை உணவில் கொடுக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.