புதிய மண் பானையை பயன்படுத்துவதற்கு முன் இதை எல்லாம் செய்ய வேண்டும்!
சாமானிய மக்களுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கும் வரப்பிரசாதமாக இருப்பது மண் பானை குடிநீர். கோடையில் புதிய மண் பானையை வாங்குபவர்கள் அதை பயன்படுத்தும் முன்பு சில விஷயங்களை செய்ய வேண்டும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
Earthen pot benefits
கோடை காலங்களில் பிரிட்ஜ் இல்லாத வீடுகளில் குளிர்ச்சியான தண்ணீருக்காக மண் பானைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. மண்பானை தண்ணீரைக் குடிப்பது உடல் நலக்கு பல நன்மைகளையும் செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Earthen pot water
வெயில் காலத்தில் புதிய பானை வாங்குபவர்கள் அதை பயன்படுத்துவதற்கு முன்பு, நன்கு சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். மண் பானையில் குடிநீரை ஊற்றும் அளவுக்கு தயார் செய்ய 3 நாள் வரை ஆகும்.
How to use Earthen pot for the first time
புதிய பானையை சுத்தப்படுத்தும் போது உள்பக்கமாக கழுவக் கூடாது. வெளிப்புறத்தில் நன்றாகக் கழுவலாம். பிறகு பானையில் முழுக்க தண்ணீர் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். மறுநாள் பானையில் உள்ள தண்ணீரை ஊற்றி, நிழலில் காய வைக்க வேண்டும்.
Prepare earthen pot for summer
மீண்டும் தண்ணீர் ஊற்றி சில மணி நேரங்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்ற வேண்டும். 2-3 முறை தண்ணீர் மாற்றிய பிறகு, அரிசி களைந்த நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு பானையில் தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் கல் உப்பைப் போட்டு 12 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். இதேபோல 3 நாட்களுக்கு சாதாரண நீர், அரிசி களைந்தநீர், உப்பு நீர் என மாற்றி மாற்றி ஊற்றி பானையை தயார் செய்ய வேண்டும்.
Terracotta pot water
3 நாட்களில் பானையை தயார் செய்ததும் குடிநீரை ஊற்றலாம். பானையில் தண்ணீரை மாற்றுவதற்கு முன் வெயிலில் காய வைக்க கூடாது. அப்படிச் செய்தால் வெயிலில் பானை விரிசல் அடைந்துவிடும்.
Clay pot water
பானையை தரையில் வைப்பதற்குப் பதிலாக, ஆற்று மணலைக் குவித்து வைத்து அதன் மேல் மண் பானையை வைக்க வேண்டும். ஈரத்துணி பானையை சுற்றி போர்த்தி வைக்கலாம். படிகாரம் அல்லது வெட்டிவேரை தண்ணீரில் போட்டு வைக்கலாம்.