
TVK First General Body Meeting : தமிழக வெற்றிக் கழத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கி முதல் அரசியல் மாநாட்டை நடத்திய நிலையில் இப்போது முதல் பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த இருக்கிறார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான தீவிர முயற்சியில் விஜய் இறங்கியுள்ளார். விரைவில் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் தான் தவெக முதல் பொதுக்குழு குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் வெயில் சுட்டெரிக்கப்போகுதாம்! பொதுமக்களுக்கு அலர்ட் கொடுக்கும் வானிலை மையம்!
அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28 ஆம் தேதி வெள்ளியன்று காலை 9 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கழக தலைவர் தலைமையில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான அழைப்புக் கடிதம் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல், வாட்ஸ் அப் மற்றும் தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்ல! 1,125 புதிய மின்சார பேருந்துகள்! பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது!
பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் உறுப்பினர்கள் அனைவரும் அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழக அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கழக பொதுச்செயலாளர் என் ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.