- Home
- Tamil Nadu News
- மயிலாடுதுறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
மயிலாடுதுறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று குத்தாலத்தில் நடைபெறுகிறது. 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

Job vacancy
Mayiladuthurai job fair : வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலையானது கிடைத்து வருகிறது.
அந்த வகையில் சென்னை முதல் ராமநாதபுரம் வரை பல மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை உருவாக்கி வருகிறது. இதனால் கிராமப்பகுதிகளில் உள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு
மேலும் தமிழக அரசு தனியார் துறையோடு இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்,
25 முன்னனி நிறுவனங்கள் பங்கேற்பு
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மார்ச் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து 25-க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திலுள்ள காலி பணியிடங்களுக்காக 500-க்கு மேற்ப்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள் என்ன.?
18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்
5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர்,
டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. மற்றும் இதர பட்டதாரிகள்.
தேவையான ஆவணங்கள்:
சுய விவர அறிக்கை,
கல்விச்சான்றுகள்,
ஆதார் அட்டை,
பாஸ்போட் அளவு புகைப்படம்,
முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ்.
மேலும் விவரங்களுக்கு 04364-299790 / 9499055904 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.