MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!

கட்சியில் பணம் இல்லை.. திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்.. உருக்கமாக பேசிய சீமான்!

இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் என்று சீமான் கூறியுள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 18 2026, 09:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
உருக்கமாக பேசிய சீமான்
Image Credit : X/Seeman

உருக்கமாக பேசிய சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோவில் பேசிய அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எப்போதும் போல என் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த ஒரு மகத்தான பேரியக்கம் மக்களை மட்டுமே நம்பி களத்திலே தனித்து நிற்கிறது. 

இங்கே பல ஆண்டுகள் அதிகாரத்தைச் செலுத்தி நிறைய பணத்தைச் சேமித்து பதுக்கி ஒதுக்கி வைத்திருக்கிற மற்ற அரசியல் கட்சிகள் மறுபடி அந்தப் பணத்தை முதலீடு செய்து அதிகாரத்தைத் தக்கவைக்க போராடும். ஒவ்வொரு தொகுதிக்கும் 30 கோடிகள் 40 கோடிகள் என்று முதலீடு செய்து அந்தத் தொகுதிகளை விலைக்கு வாங்க பார்க்கும்.

23
பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்ய...
Image Credit : x/seeman

பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்ய...

இந்தச் சூழலில் இந்தக் கேடுகெட்ட பணநாயகத்தை வீழ்த்தி மாண்புமிக்க ஜனநாயகத்தை மலரச் செய்ய வேண்டும் என்ற மகத்தான கனவோடு களத்திலே நிற்கிறோம் உங்கள் பிள்ளைகள். வாக்குக்குக் காசு கொடுக்கிற இந்த காலத்தில் ஒரு தொகுதியை வெல்ல 30 கோடிகள் முதலீடு செய்கிற ஒரு முதலாளி தன் லாப தேவைக்கு முதலீடு செய்வாரா? அல்லது மக்கள் சேவைக்கு முதலீடு செய்வாரா என்கிற கேள்வி அங்கே எழுகிறது. வாக்குக்குக் காசு கொடுக்கிற அந்த இடத்தில் தான் ஊழல் லஞ்சத்திற்கான விதை ஊன்றப்படுகிறது என்பது உங்கள் பிள்ளைகள் எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை; உண்மையும் கூட.

கனவோடு நிற்கிறோம்

அந்த இடத்திலே சேவை செத்து போகிறது. இப்போது இதை மாற்ற வேண்டும் என்று ஒரு பெருங்கனவோடு உங்கள் பிள்ளைகள் தொடர்ந்து களத்திலே நின்று போராடி வருகிறோம். 30 கோடிகள் முதலீடு செய்கிற வேட்பாளர்களுக்கு இடையில் போட்டியிடுகிற நாங்கள் அந்த வட்டி காசைக் கூட செலவு பண்ண முடியாத நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை தன்னலமற்று உண்மையும் நேர்மையுமாகப் பணியாற்ற வேண்டும் என்கிற மனம் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்கத்தான் தொடர்ந்து உங்கள் பிள்ளைகள் இந்த களத்திலே நின்று வருகிறோம். இம்முறையும் அதே கனவோடு நிற்கிறோம்.

Related Articles

Related image1
சட்டமன்ற தேர்தல்: காரைக்குடியில் போட்டியிடுகிறார் சீமான்..! 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்
Related image2
Vijay: மொத்தமும் மாறப்போகுது.! சீமான் - தளபதி கூட்டணி கன்பார்ம்.?! அண்ணனுக்காக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் விஜய்.!
33
மக்கள் புரட்சியால் உறுதி செய்வோம்
Image Credit : Seeman

மக்கள் புரட்சியால் உறுதி செய்வோம்

பசி-பஞ்சம், ஊழல்-இலஞ்சம், கொலை-கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை வளக்கொல்லை, மது-மதப் போதை இவை ஏதுமற்ற ஒரு புதியதொரு தேசம் செய்வோம்! மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்! என்ற முழக்கத்தோடு களத்திலே நிற்கிறோம். எப்போதும் போல எமது மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்களால் இயன்ற நிதியைக் கொடுத்து எங்களை வலிமைப்படுத்தி இருக்கிறீர்கள்.

திரள் நிதியை அள்ளிக் கொடுங்கள்

இம்முறையும் மக்களிடமிருந்து மக்களுக்காக வந்த பிள்ளைகளுக்கு எங்கள் பெற்றோர், எங்கள் உடன் பிறந்தோர் இனமாகவும் பணமாகவும் வலிமையாகவும் வளமையாகவும் நீங்களே நின்றிருக்கிறீர்கள் இம்முறையும் நிற்பீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் அன்போடு கேட்கிறோம்.

 https://donate.naamtamilar.org/election_campaign_2026 திரள்நிதி திரட்சியின் வாயிலாக உங்களால் இயன்ற உதவியைச் செய்து உங்கள் பிள்ளைகளின் கைகளை வலிமைப்படுத்திவிடுங்கள். களத்திலே நின்று நம் இன முன்னோர்கள் கண்ட கனவை வென்று முடிப்போம் என்கிற உறுதியைத் தருகிறோம்'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சீமான்
நாம் தமிழர் கட்சி
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
Latest Videos
Recommended Stories
Recommended image1
போடியில் ஓ.பி.எஸை பொடிப்பொடியாக்க ஸ்கெட்ச்..! அதிமுகவின் 'மிஸ்ரா' அஸ்திரம் - தேனியில் அதிரும் அரசியல் களம்!
Recommended image2
யாருடனும் சமரசம் இல்லை.. நான் மக்கள் டீம்.. கூட்டணிக்கு எண்ட் கார்டு போட்ட விஜய்.. அதிரடி அறிவிப்பு!
Recommended image3
Now Playing
"கடைகோடி மக்களுக்கும் நல்லது செஞ்சிருக்கோம்" செய்ததை எடுத்துச்சொன்ன அமைச்சர் கீதாஜீவன்
Related Stories
Recommended image1
சட்டமன்ற தேர்தல்: காரைக்குடியில் போட்டியிடுகிறார் சீமான்..! 234 தொகுதி வேட்பாளர்களும் அறிமுகம்
Recommended image2
Vijay: மொத்தமும் மாறப்போகுது.! சீமான் - தளபதி கூட்டணி கன்பார்ம்.?! அண்ணனுக்காக முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் விஜய்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved