உக்ரைன், ரஷ்யா இடையே 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் சில நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார்.
Russia-Ukraine War: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த முயற்சி பலன் கொடுக்கும் என்று தெரிகிறது. அமெரிக்காவிடம் இருந்து வந்த 30 நாள் போர் நிறுத்த (Ceasefire) யோசனைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அமைதி திட்டத்துக்கு சில நிபந்தனைகளும் விதித்துள்ளார்.
புதின் போர் நிறுத்த யோசனை குறித்து என்ன சொன்னார்?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ''நாங்கள் போர் நிறுத்தத்துக்கு (Ceasefire) ஒத்துக்கிறோம். ஆனால் இது வெறும் போர் நிறுத்தமாக மட்டும் இல்லாமல் நீண்ட கால அமைதிக்கு (Long-Term Peace) வழி காட்டும் மாதிரி இருக்க வேண்டும்'' என சொல்லி இருக்கிறார்.
போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா என்ன நிபந்தனை விதித்துள்ளது?
கிரெம்ளினில் (Kremlin) பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) உடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய புதின் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏதாவது செய்து கொண்டால் அது பிரச்சனையின் மூல காரணத்தை (Root Causes of Conflict) தீர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
அமெரிக்க போர் நிறுத்த யோசனைக்கு ரஷ்யா என்ன நிலைப்பாடு?
அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) இந்த யோசனையுடன் மாஸ்கோவில் (Moscow) உள்ளார். ஆனால் கிரெம்ளின் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால் உக்ரைனுக்கு மறுபடியும் தாக்குதல் நடத்த திட்டம் போட வாய்ப்பு கிடைத்து விடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் நம்பிக்கை
இது தொடர்பாக பேசியிருந்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க குழுவால் ரஷ்யாவை போர் நிறுத்தத்துக்கு ஒத்துக்க வைக்க முடியும். எங்களால் ரஷ்யாவை தடுத்து நிறுத்த முடிந்தால் அது முழு போர் நிறுத்தமாக இருக்கும். அப்புறம் போர் வரவே வராது'' என்று கூறியுள்ளார்.
ரஷ்யா மீது குற்றம்சாட்டும் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ''ரஷ்யா இன்னும் இந்த யோசனைக்கு முறையான பதில் எதுவும் சொல்லவில்லை. ரஷ்யா இதுவரைக்கும் இந்த யோசனைக்கு எந்த உறுதியான பதிலும் கூறவில்லை. ரஷ்யாவுக்கு அமைதியில் விருப்பம் இல்லை. போரை ரொம்ப நாள் இழுக்க நினைக்கிறார்கள்'' என்று கூறியிருந்தார். ஆனால் இந்த கருத்துக்கு மாற்றாக ரஷ்யா இப்போது போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
