MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதிக்கு Y பிரிவு பாதுகாப்பு; விஜய் நீலாங்கரை உதவி ஆணையர் நடத்திய முக்கிய ஆலோசனை என்ன?

தளபதிக்கு Y பிரிவு பாதுகாப்பு; விஜய் நீலாங்கரை உதவி ஆணையர் நடத்திய முக்கிய ஆலோசனை என்ன?

இன்று முதல் தளபதி விஜய்க்கு, துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த கமாண்டோகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையில், இது குறித்து நீலாங்கரை உதவி ஆணையர் பரத் விஜய்யுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். 

3 Min read
Author : manimegalai a
Published : Mar 14 2025, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Thalapathy Vijay starer Thalaivaa ott update

Thalapathy Vijay starer Thalaivaa ott update

தமிழ் சினிமாவில் தன்னுடைய தந்தை, எஸ் ஏ சி மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி... பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் தளபதி விஜய். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'கோட்' திரைப்படம் ரிலீசானது. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே  தளபதி விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார்.
 

 

27
திடீர் என வெளியான விஜய்யின் அரசியல் பிரவேசம்

திடீர் என வெளியான விஜய்யின் அரசியல் பிரவேசம்

அதாவது கடந்த 5 வருடங்களாகவே, தன்னுடைய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் அரசியல் பேசி வந்த விஜய், அரசியலுக்கு வர ஆயத்தமாகி வருகிறார் என தகவல்கள் வெளியானது. ஆனால் அப்போதெல்லாம் சைலன்டாக இருந்த விஜய், கடந்தாண்டு தன்னுடைய அரசியல் நகர்வை அதிகார பூர்வமாக வெளிப்படுத்தினார்.

Thalapathy Vijay: விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: எப்போது அமலுக்கு வருகிறது?
 

37
'தமிழக வெற்றிக் கழகம்'

'தமிழக வெற்றிக் கழகம்'

'தமிழக வெற்றிக் கழகம்' என பெயரிடப்பட்டுள்ள தன்னுடைய கட்சியை, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு, மாவட்ட செயலாளர்களையும் அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அதேபோல் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். விஜய் சமீபத்தில் கூட, பரந்தூரில் விமான நிலையம் வரக்கூடாது என விவசாய மக்களுக்கு ஆதரவாக போர் கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.
 

47
மாணவர்கள் படிப்பை ஊக்குவிக்கும் விஜய்

மாணவர்கள் படிப்பை ஊக்குவிக்கும் விஜய்

மாணவர்கள் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக வருடம் தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வருகிறார்.  தளபதி விஜயின் அரசியல் என்ட்ரி அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்து இருந்தாலும், ஒரு சிலர் தளபதி விஜய் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

'ஜனநாயகன்' படப்பிடிப்பில் தளபதி எப்படி? வில்லன் நடிகர் பாபி தியோல் ஓப்பன் டாக்!
 

57
'ஜனநாயகன்' படமே கடைசி:

'ஜனநாயகன்' படமே கடைசி:

காரணம் தளபதி விஜய், மக்கள் பணியில் முழுமையாக ஈடுபட உள்ளதால் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என்பதையும் அறிவித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

67
அரசியல் கட்சியினருக்கு பயம் காட்டிய தளபதின் முதல் மாநாடு

அரசியல் கட்சியினருக்கு பயம் காட்டிய தளபதின் முதல் மாநாடு

அரசியல் பணிகளை துரிதப்படுத்தி உள்ள விஜய், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்டம், விக்ர வாண்டியில் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். விஜயின் முதல் மாநாடு எப்படி இருக்கும்? என எதிர்பார்த்த பிற அரசியல் கட்சியினருக்கு கட்சியினர்... விஜயின் அரசியலை ஆதரித்து வந்த கூட்டத்தை கண்டு மிரண்டு போனார்கள். தற்போது வெளியில் விஜயை பார்த்து பயமில்லை எனக் திமுக மற்றும் அதிமுக காட்சிகள் கூறி வந்தாலும்,  விஜயின் அரசியல் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து.

தீவிர விஜய் ரசிகன்; ரூ.1400 சம்பளத்திற்கு சினிமாவில் நடித்த வருண் சக்கரவர்த்தி - அடடே இந்த படமா?

77
தளபதி விஜய்யின் Y பிரிவு பாதுகாப்புக்கு நடந்த ஆலோசனை:

தளபதி விஜய்யின் Y பிரிவு பாதுகாப்புக்கு நடந்த ஆலோசனை:

இந்நிலையில் தளபதி விஜய்யின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், "இன்று முதல் (மார்ச் 14-ஆம் தேதி) இவருக்கு Y  பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த பாதுகாப்பு பணியில் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசவ் படையை சேர்ந்த கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். இதைத்தொடர்ந்து தளபதி விஜயின் நீலாங்கரை வீட்டில் உதவி ஆணையர் பரத் தலைமையிலான போலீசார் வருகை தந்து, முக்கிய ஆலோசனைகள் நடத்தி உள்ளனர்.

இந்த ஆலோசனையின் போது, Y பிரிவு பாதுகாப்பபு குறித்து தளபதி விஜய்க்கு விளக்கம் கொடுத்ததாகவும். தமிழக பகுதிகளில் மட்டுமே Y பிரிவு அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பார்களே தவிர, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படாது போன்ற தகவல்களை எடுத்து கூறியதாவும், கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் சகுனி வேலையால் பயந்து நடுங்கும் விஜயா... மீனாவின் பிளான் சக்சஸ் ஆகுமா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனியின் பிசினஸுக்கு வில்லனாக மாறும் சக்தி... கதைக்களத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image3
Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved