- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Anna Serial: சௌந்தரபாண்டி சூழ்சியால் சண்முகத்துக்கு ஏற்பட்ட ஆபத்து? அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: சௌந்தரபாண்டி சூழ்சியால் சண்முகத்துக்கு ஏற்பட்ட ஆபத்து? அண்ணா சீரியல் அப்டேட்!
திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை, வாரம் 5 நாட்கள் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'அண்ணா'. பிரைம் டைம் தொடரான, இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இன்றைய தினம் சௌந்தரபாண்டியால் சண்முகம் எதிகொள்ள உள்ள ஆபத்து பற்றி பார்க்கலாம்.

சண்முகத்தின் தங்கை இசக்கி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், ஒட்டு மொத்த குடும்பமும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். அதே சமயம், இந்த குடும்பத்தில் யாருக்கும் முதல் வாரிசு தங்கியது இல்லை என சௌந்தரபாண்டி சொன்ன வார்த்தையால் இசக்கி மனம் நொந்து போகிறாள். பரணியும் இசக்கியை கூடவே இருந்து பார்த்து கொள்வதற்காக தன்னுடைய அமெரிக்கா பயணத்தை தள்ளி போடுகிறாள்.
சௌந்தரபாண்டியின் சூழ்ச்சி:
இப்படியான நிலையில், தன்னுடைய தங்கை இசக்கிக்காகவும், அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவும் சண்முகம் விரதம் இருக்க முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். சண்முகத்தை எப்படியும் பரிகாரம் செய்ய விட கூடாது என்பதில் குறியாக இருக்கும் சௌந்தரபாண்டி, சண்முகம் குளிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரில் ஐஸ் கட்டியை கொட்டுகிறார்.
Anna serial: பரணி போட்ட கண்டீஷன்; சண்முகம் தலையில் இடியை இறக்கிய சௌந்தரபாண்டி - அண்ணா அப்டேட்!
பதிலடி கொடுத்த சண்முகம்:
சண்முகம், குளிக்க செல்லும் போது... சௌந்தரபாண்டி என் பேரப்பிள்ளையின் உசுரு உன்கிட்ட தான் இருக்கு, விரதத்தத்துல எந்த ஒரு தப்பும் வந்துட கூடாது என மிகவும் நல்லவர் போல் பேச, இதற்க்கு சண்முகம் அதெல்லாம் எனக்கு தெரியும் நீங்க போய் உங்க வேலைய பாருங்க என்பது போல் சொல்கிறான்.
சண்முகத்துக்கு எதிரான சதி
ஒரு பாக்கெட் தண்ணீரை எடுத்து மேலே ஊற்றியதும், சண்முகத்திற்கு நடுக்கம் எடுக்கிறது. மனதிற்குள் சந்தேகம் இருந்தாலும், அதனை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. சண்முகம் நடுக்கத்தை கண்டு அவனுக்கு ஏதேனும் பிரச்சனையா என அனைவரும் கேட்க... எனக்கு ஒன்னும் இல்லை என கூறி சமாளிக்கிறான்.
Anna Serial: பரணி - சண்முகத்தை ஒன்னு சேர்க்க போகும் நல்ல செய்தி? அண்ணா சீரியல் அப்டேட்!
ஆவலோடு காத்திருக்கும் சனியன் - சௌந்தரபாண்டி
சனியனும் - சௌந்தரபாண்டியும் சண்முகத்துக்கு ஏதாவது ஆகிவிடாதா? என ஆவலோடு பார்த்துக்கொண்டிருக்கும் போது தான், சண்முகத்தின் நிலை மோசமாகிறது. பரணி உடனடியாக சிகிச்சை செய்து சண்முகத்தை காப்பாற்றுவாளா? சண்முகம் நேர்த்திக்கடனை நல்ல படியாக செய்து முடிப்பானா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.