MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தினேஷின் கதையை முடித்த ரோகிணி... மனோஜை டார்ச்சர் பண்ணிய தங்கச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

தினேஷின் கதையை முடித்த ரோகிணி... மனோஜை டார்ச்சர் பண்ணிய தங்கச்சி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை தொடர்ந்து பிளாக்மெயில் செய்துவந்த தினேஷை முத்துவிடம் தொக்காக மாட்டிவிட்டுள்ளார் ரோகிணி. அதன்பின் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 18 2026, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ், ரோகிணியை எப்படியாவது டைவர்ஸ் பண்ணிவிட வேண்டும் என இருக்க, ரோகிணியோ மனோஜை விட்டு பிரியவே கூடாது என்கிற முடிவில் இருக்கிறார். அடிக்கடி அவரை ஏதேனும் பிரச்சனையில் சிக்க வைக்கும் ரோகிணி, நேற்றைய எபிசோடில் கிரிஷ் உடன் ஷோரூமுக்கு வந்து, ஒரு டிராமா போட்டிருந்தார். அப்போது கிரிஷை மனோஜ் தள்ளிவிட்டதை பார்த்து, அங்கிருந்த வாடிக்கையாளர்கள், மனோஜை கொடுமைக்காரன் என திட்டிவிட்டு, கிளம்பி சென்றிருந்தனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முத்து கொடுத்த ஐடியா
Image Credit : jiohotstar

முத்து கொடுத்த ஐடியா

மனோஜ் ஷோரூமில் ரோகிணி செய்த விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருக்க, அப்போது ஒரு ஐடியா கொடுக்கும் முத்து, இதுவே நானாக இருந்திருந்தால், கிரிஷிடம் நீ நல்லா மார்க் வாங்கிருக்க, இதை நீ மொதல்ல என் அம்மா கிட்ட காட்டணும், அதை அவங்க பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க, வா பாட்டிகிட்ட போகலாம்னு ஒரு போடு போட்டிருந்தேனா பார்லர் அம்மா தலைதெறிக்க ஓடிருக்கும். அப்போ அங்கிருந்தவங்க இந்த பொண்ணுக்கு மாமியாரை மதிக்க தெரியலேனு பேசிருப்பாங்க, உன்னை எல்லாரும் நல்லவனா பாத்திருப்பாங்க என சொல்கிறார்.

35
கிரிஷை சந்திக்கும் மீனா
Image Credit : jiohotstar

கிரிஷை சந்திக்கும் மீனா

மறுபுறம் கிரிஷ் ஸ்கூலில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும் போது மீனா வண்டியில் வருவதை பார்க்கிறார். அப்போது அவர் கிரிஷை அழைத்து நலம் விசாரிப்பதோடு அவனுக்கு சாக்லேட்டும் வாங்கிக் கொடுக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற விஜயா, மீனா, கிரிஷை கொஞ்சுவதை பார்த்துவிடுகிறார். இதன்பின்னர் மீனா அங்கிருந்து கிளம்ப, அந்த நேரத்தில் ரோகிணி வருகிறார். அவர் கிரிஷிடம் எதுக்குடா அவகூட பேசுற என திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து தினேஷ் அங்கு பைக்கில் வருகிறார். அவர் ரோகிணியை தனியாக அழைத்து பேசுகிறார்.

45
தினேஷை மாட்டிவிட்ட ரோகிணி
Image Credit : jiohotstar

தினேஷை மாட்டிவிட்ட ரோகிணி

தினேஷை பார்த்ததும் டென்ஷன் ஆன ரோகிணி, என்னடா வேணும் உனக்கு என கேட்க, அதற்கு அவர், நீயும் பணம் தர்றேன்னு சொல்லி ஏமாத்திகிட்டே இருக்க, எனக்கு இப்போ பணம் கொடுக்கலேனா உன்னைப் பற்றிய எல்லா உண்மையையும் உங்க வீட்டுல சொல்லிடுவேன் என சொல்கிறார். ரோகிணி பற்றிய உண்மைகள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பது தினேஷுக்கு தெரியாததால், அதை சொல்லி பிளாக்மெயில் பண்ணுகிறார். உடனே ரோகிணி, தயவு செஞ்சு சொல்லிடாத, குறிப்பா முத்துகிட்ட மட்டும் சொல்லிடாத என கெஞ்சுவது போல் நடிக்கிறார்.

55
தங்கச்சி டார்ச்சர் தாங்க முடியல
Image Credit : jiohotstar

தங்கச்சி டார்ச்சர் தாங்க முடியல

அப்போ உடனே போய் முத்துகிட்ட உண்மையை சொல்றேன் என கிளம்புகிறார் தினேஷ். அவர் சென்றதும், இன்னையோட இவன் தொல்லை முடிஞ்சது என நிம்மதி பெருமூச்சு விடுகிறார் ரோகிணி. மறுபுறம் வீட்டில் மனோஜுக்கு விஜயா பார்த்த பெண் வீட்டுக்கு வருகிறார். தங்கச்சி முறை வந்ததால் அந்த திருமணம் நின்றாலும் தனக்கு அண்ணன்கள் கிடைத்திருக்கும் சந்தோஷத்தில் அவர்களை பார்க்க வந்திருப்பதாக சொல்லும் அவர், மனோஜை அண்ணா... அண்ணா என அழைக்க, அதைக்கேட்டு கடுப்பாகிறார் மனோஜ். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன ஆனது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : தந்தை மரணம்... பிக் பாஸ் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிய போட்டியாளர் - ஷாக் ஆன ஹவுஸ்மேட்ஸ்
Recommended image2
Bigg Boss Lakshmi Priya Salary : 18 நாட்களில் எலிமினேட் ஆன லட்சுமி பிரியா... பிக் பாஸ் வாரிவழங்கிய சம்பளம் இத்தனை லட்சமா?
Recommended image3
Lakshmi Priya : எலிமினேட் ஆகும் முன் அவினாஷை லெஃப்ட் ரைட் வெளுத்துவாங்கிய லட்சுமி பிரியா... ஷாக் ஆன பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
Related Stories
Recommended image1
ரவி பெயரில் நீத்து தொடங்கிய புது பிசினஸ்... முத்து - மீனா இடையே வெடித்த மோதல் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
சிந்தாமணியின் பிளானை கேட்டு ஆடிப்போன விஜயா... மனோஜை டேமேஜ் பண்ணிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved