நடிகர் ரியோ ராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் நடிப்பில், உருவாகியுள்ள ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பாப்போம்.
YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'ஸ்வீட் ஹார்ட்'. ரியோ ராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி உள்ளார். 'ஸ்வீட்ஹார்ட்' படத்தின் டிரெய்லர் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக இந்த படம் உருவாகி உள்ளது.
உலகம் முழுவதும், இன்று (மார்ச் 14ஆம் தேதி) ரிலீஸ் ஆகியுள்ள இந்த படம், தயாரிப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவையும் , ஹீரோவான ரியோ ராஜை காப்பாற்றியதா? என்பதை பார்ப்போம்.
விமர்சன ரீதியாக இந்த படம், ஜோ படம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு தரப்பினருக்கு படம் பிடித்திருந்தாலும், மற்றொரு தரப்பினர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருவதால், முதல் நாளே கலவையான விமர்சனத்தை சந்திக்கும் படமாக ஸ்வீட் ஹார்ட் மாறியுள்ளது.
ரசிகர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு, "ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் ஒரு ரோம் காம் டிராமாவை போல் உள்ளது என கூறியுள்ளார். ரியோ மற்றும் கோபிகா இருவரும் தங்களின் தரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இருவரின் காதல் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் BGM சிறப்பாக இருக்கிறது. இன்டெர்வல் மற்றும் கிளைமேக்ஸ் சிறப்பு. மொத்தத்தில் இது ஒரு டீசென்ட் வாட்சபபுள் படம் என கூறியுள்ளார்.
மற்றொரு விமர்சனத்தில், "ஸ்வீட் ஹார்ட், கதாநாயகனின் பாதுகாப்பின்மை மற்றும் குழந்தைப் பருவ அதிர்ச்சி பற்றி பேசும் ஒரு எளிய காதல் திரைப்படம். ரியோ ராஜ் , பாராட்டத்தக்க மற்றும் திறமையான நடிப்பை வெளிபடுத்தி உள்ளார். கோபிகா, பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திடமான பாத்திரம்.
ரியோ தன்னையும் அறியாமல் தன் உறவில் எப்படி சுயநலமாக மாறுகிறான் என்பதுதான் படம். கோபிகாவின் உண்மையான காதல், பிறந்த குழந்தையின் வருகை மற்றும் பல விஷயங்கள் ரியோவின் பார்வையை எப்படி மாற்றுகிறது. க்ளைமாக்ஸ் ஒரு இலகுவான குறிப்பில் முடிவடைகிறது. எதிர்மறையான சில விஷயங்கள் படத்தில் இருந்தாலும், உணர்வு பூர்வமாக கதை வேரூன்றச் செய்கிறது. யுவனின் பின்னணி இசை அபாரம். இது ஒரு உணர்வு பூர்வமான கதைக்களம் என கூறி இப்படத்திற்கு 5க்கு 3 ஸ்டார்களை வழங்கி உள்ளார்.
மற்றொரு ரசிகர் மிகவும் எளிமையாக தன்னுடைய விமர்சனத்தில், "ஸ்வீட் ஹார்ட் மனதை உருவ வைக்கும் திரைப்படம். ரியோ ராஜ் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என கூறியுள்ளார்."
