MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புதுசு கண்ணா புதுசு; இந்த வாரம் மட்டும் ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸா?

புதுசு கண்ணா புதுசு; இந்த வாரம் மட்டும் ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸா?

சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி முதல் தம்பி ராமையா நடித்த ராஜாக்கிளி வரை இந்த வாரம் என்னென்ன படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 14 2025, 08:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

March 14 OTT Release Movies : மார்ச் மாதம் தியேட்டரில் பெரிய படங்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் ஓடிடியில் கடந்த வாரம் அஜித் நடித்த விடாமுயற்சி, சாய் பல்லவியின் தண்டேல் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தன. இந்த நிலையில், மார்ச் 14ந் தேதி ஏராளமான தமிழ் படங்களும், பிற மொழி திரைப்படங்களும் ஓடிடியில் போட்டி போட்டு ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்.

24
ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள்

ஓடிடியில் வெளியான தமிழ் படங்கள்

தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் காதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்த 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் மார்ச் 14ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா என இரு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி உள்ளது. அடுத்தபடியாக தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் ராஜாக்கிளி. இப்படம் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... 2K Love Story Movie Team Interview | 2K Love Story திரைப்பட குழுவினருடன் கலகலப்பான சிறப்பு நேர்காணல்

34
OTT Release Tamil Movies

OTT Release Tamil Movies

அடுத்ததாக சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த ராமம் ராகவம் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதுதவிர நட்டி நட்ராஜ் நடித்த சீசா திரைப்படம் ஆஹா மற்றும் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவான ரிங் ரிங் திரைப்படமும் இந்த வாரம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகின்றது. நடிகை லிஜோமோல் நடித்த காதல் என்பது பொதுவுடைமை படமும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

44
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிற மொழி படங்கள்

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பிற மொழி படங்கள்

தெலுங்கில் மம்முட்டி நடித்த ஏஜண்ட் திரைப்படம் சோனி லிவ் தளத்திலும், ஹத்யா திரைப்படம் அமேசான் பிரைமிலும், பராக்கிரமம் படம் ஈடிவி வின் தளத்திலும், அர்ஜுனா பல்குனா அமேசான் பிரைமிலும் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. அதேபோல் மலையாள படங்களான பொன்மான் ஹாட்ஸ்டாரிலும், த்ராயம் அமேசான் பிரைமிலும், தி மலபார் டேல்ஸ் சிம்ப்ளி சவுத் தளத்திலும் வெளியாகி உள்ளது. ஆங்கிலத்தில் கிளாடியேட்டர் 2 அமேசான் பிரைம் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. இந்தியில் வன்வாஸ் ஜீ5 தளத்திலும், அசாத் நெட்பிளிக்ஸிலும், ஆச்சாரிபா ஹாட்ஸ்டாரிலும், பி ஹாப்பி அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 20 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய டிராகன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved