விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 20 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய டிராகன்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தின் விடாமுயற்சி பட சாதனையை முறியடித்து உள்ளது.

'Dragon' box office record: Pradeep Ranganathan's film surpasses 'Vidaamuyarchi' box office collection : அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார்.

Dragon
டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன டிராகன், முதல் வாரத்திலேயே தனுஷ் படத்தை வாஷ் அவுட் செய்தது. பின்னர் தனிக்காட்டு ராஜாவாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடிவந்த டிராகன், ரிலீஸ் ஆன முதல் வாரத்திலேயே ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை செய்து அசத்தியது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... டிராகன் பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து புகழ்ந்த ரஜினிகாந்த் !
Dragon Box Office Record
நடிகர் பிரதீப் ரங்கநாதன் கெரியரில் 100 கோடி வசூல் செய்யும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் அவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் இந்த இமாலய வசூலை குவித்திருந்தது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஹீரோவாக நடித்த முதல் 2 படங்களிலும் 100 கோடி வசூல் அள்ளிய ஒரே ஹீரோ பிரதீப் ரங்கநாதன் தான். டிராகன் திரைப்படம் தற்போது 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
Dragon Surpass Vidaamuyarchi Lifetime Box Office Collection
இந்நிலையில், டிராகன் திரைப்படம் மற்றுமொரு மாஸ் சாதனையை படைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அஜித்தின் விடாமுயற்சி இருந்தது. அப்படம் ரூ.137 கோடி வசூலித்து இருந்தது. அந்த சாதனையை தற்போது டிராகன் படம் முறியடித்து உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் விடாமுயற்சியை பின்னுக்கு தள்ளி பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... லைகாவின் கஜானாவை காலி செய்த விடாமுயற்சி; அஜித்தால் இத்தனை கோடி நஷ்டமா?