MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்லீ கேட்ட டூமச் பட்ஜெட்; ஆளவிடுங்கடா சாமினு தலைதெறிக்க ஓடிய சன் பிக்சர்ஸ்?

அட்லீ கேட்ட டூமச் பட்ஜெட்; ஆளவிடுங்கடா சாமினு தலைதெறிக்க ஓடிய சன் பிக்சர்ஸ்?

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தின் பட்ஜெட்டை கேட்டு தயாரிப்பாளர்கள் தெறித்தோடுகிறார்களாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 14 2025, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Atlee - Allu Arjun Movie : அல்லு அர்ஜுன் (Allu Arjun) – அட்லீ (Atlee) இணையும் திரைப்படம் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்துள்ளன. புஷ்பா 2 வெற்றிக்கு பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் இது என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் மீடியாவில் கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து பலவிதமான செய்திகள் பரவி வருகின்றன. அது வேறு எதுவும் இல்லை தயாரிப்பாளர் இந்த படத்தை செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

24
Allu Arjun And Atlee

Allu Arjun And Atlee

அட்லீ தனது அடுத்த படத்தை சன் பிக்சர்ஸுக்கு செய்வதாக ஜவான் ரிலீஸுக்கு முன்பே கையெழுத்திட்டு முன்பணம் பெற்றார். ஆனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது அப்படத்தில் இருந்து ஜகா வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் இயக்குனர் அட்லீ கேட்கும் பட்ஜெட்டுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் நோ சொல்லி உள்ளதாம். முதலில் சல்மான் கானுடன் படம் செய்யலாம் என்று நினைத்து, கடைசியில் அல்லு அர்ஜுனிடம் வந்து நின்றார் அட்லீ. ஆனால் பட்ஜெட் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால் படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் வெளியேறிவிட்டதாம்.

இதையும் படியுங்கள்... அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் 5 ஹீரோயின்களா? யார்... யார் தெரியுமா?

34
Atlee - Allu Arjun Movie Update

Atlee - Allu Arjun Movie Update

இதையடுத்து தயாரிப்பாளர் தேர்வு செய்யும் பொறுப்பை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய அல்லு அர்ஜுன், கேம் சேஞ்சர் படத்தால் கடும் நஷ்டத்தில் இருக்கும் தில் ராஜுவிடம் பேசினாராம். ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்தால் பலத்த அடி வாங்கியதால் மீண்டும் அதுபோல ஒரு ரிஸ்க் எடுக்க முடியாது என கூறி நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு இப்படத்திற்காக அட்லீ ரூ.100 கோடி சம்பளம் கேட்கிறாராம். அதுவும் தில் ராஜு விலகலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

44
Atlee - Allu Arjun Movie Budget

Atlee - Allu Arjun Movie Budget

அதோடு அட்லீயும் ஃபார்மில் இருக்கிறார். அல்லு அர்ஜுன் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் பட்ஜெட் கணக்குகள் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகின்றன. அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் தான் தயாரிப்பாளர்கள் தெறித்தோடுகிறார்களாம்.

இதையும் படியுங்கள்... விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அல்லு அர்ஜுன்
அட்லீ

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved