அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் 5 ஹீரோயின்களா? யார்... யார் தெரியுமா?
அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பான் இந்தியா படத்தில் புஷ்பா 2 நாயகன் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

5 Heroines in Atlee - Allu Arjun Movie : 2024ம் ஆண்டு ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுனோட புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிஸ்ல வேற லெவல்ல ஹிட் ஆச்சு. வெளிநாடுகள்லயும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுது. படத்தோட சக்சஸ பார்த்துட்டு, புஷ்பா பார்ட் 3யும் எடுக்கப் போறதா சொல்லியிருக்காங்க. கொஞ்ச நாள் பிரேக் எடுத்துட்டு அல்லு அர்ஜுன் புஷ்பா 3க்கு ரெடியாகப் போறாராம். சமீபத்துல அட்லீ குமார் டைரக்ஷன்ல அல்லு அர்ஜுன் நடிக்கப் போறதா நியூஸ் வந்துச்சு. இப்போ இன்னொரு சூப்பர் நியூஸ் என்னன்னா, அல்லு அர்ஜுன், அட்லீ படத்துல ஒரு ஹீரோயின் இல்ல, ரெண்டு ஹீரோயின் இல்ல, மொத்தம் 5 ஹீரோயின்ஸ் நடிக்கப் போறாங்களாம்.
Director Atlee
புஷ்பா 2வோட பெரிய சக்சஸுக்கு அப்புறம், அல்லு அர்ஜுன் அடுத்ததா என்ன பண்ணப் போறாருன்னு தெரிஞ்சுக்க ஃபேன்ஸ் ரொம்ப ஆர்வமா இருக்காங்க. அவரோட நெக்ஸ்ட் பிளான் பத்தி நிறைய பேச்சு அடிபடுது. அட்லீ கூட அல்லு அர்ஜுன் சேரப் போறதா சொல்றாங்க. அல்லு அர்ஜுன் படத்துல அஞ்சு ஹீரோயின்ஸ் நடிக்கப் போறாங்களாம். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முக்கியமான ரோல்ல நடிக்கலாம்னு சொல்றாங்க. அமெரிக்கா, கொரியால இருந்து மூணு இன்டர்நேஷனல் நடிகைகளும் நடிக்கப் போறாங்களாம்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?
Allu Arjun
ஜான்வி கூட இன்னொரு இந்திய நடிகையும் நடிக்கப் போறாங்களாம். இந்தப் படம் மறுபிறவி கான்செப்டை வச்சு இருக்கலாம்னு சொல்றாங்க. இதுல அல்லு அர்ஜுன் ரெண்டு வேற வேற ரோல்ல வருவாராம். ஆனா, இத பத்தி இன்னும் அபிஷியலா எதுவும் சொல்லல. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2 படம் பாக்ஸ் ஆபிஸ்ல செம ஹிட் அடிச்சது. இப்படம் ரிலீஸ் ஆன உடனே எல்லா இடத்துலயும் வசூல் வேட்டை ஆடுச்சு. புஷ்பா 2க்கு அப்புறம் எல்லாருக்கும் வேற மாதிரி கிரேஸ் வந்துருச்சு. டைரக்டர் சுகுமார் படத்துல அல்லு அர்ஜுன் கூட ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் முக்கியமான ரோல்ல நடிச்சிருக்காங்க. 500 கோடி பட்ஜெட்ல எடுத்த இந்த படம் 1800 கோடி வசூல் பண்ணிருக்கு.
Atlee Next Movie
இயக்குனர் அட்லீ ஏற்கனவே தமிழில் ராஜா ராணி, விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப்படங்களை இயக்கி இருக்காரு. பின்னர் பாலிவுட்டுக்கு பறந்த அட்லீ அங்கு முதல் படமே ஷாருக்கானை வச்சு இயக்குனாரு. அந்த படம் தான் ஜவான். கடந்த 2023ல ரிலீஸ் அன ஜவான் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் குவிச்சது. இதையடுத்து தான் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க ரெடி ஆகி இருக்காரு அட்லீ.
இதையும் படியுங்கள்... அல்லு அர்ஜுன் படத்தில் மாஸ் ரோல்; பிரபல கோலிவுட் ஹீரோவுக்கு வலைவிரித்த அட்லீ!