அல்லு அர்ஜுன் படத்தில் மாஸ் ரோல்; பிரபல கோலிவுட் ஹீரோவுக்கு வலைவிரித்த அட்லீ!
புஷ்பா 2 வெற்றிக்கு பின்னர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தை அட்லீ இயக்க உள்ளார். அப்படத்தில் பிரபல தமிழ் ஹீரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

Sivakarthikeyan Will Join in Atlee - Allu Arjun Movie : அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பான் இந்தியா திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிக்க உள்ளாராம்.
கோலிவுட்டில் ஜீரோ பிளாப் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தமிழில் இதுவரை இயக்கிய ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய நான்கு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லீ, அங்கு ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கினார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
Allu Arjun, Atlee
ஜவான் படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இன்னும் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிடாமல் உள்ளார் அட்லீ. ஆரம்பத்தில் அவர் சல்மான் கானை வைத்து பான் இந்தியா படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது கைவிடப்பட்டு தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு மாஸான கமர்ஷியல் படத்தை இயக்க உள்ளாராம் அட்லீ. இப்படம் சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... அட்லீ படத்தில் சல்மானுக்கு பதில் அல்லு அர்ஜூன்? ரூ.600 கோடி பட்ஜெட்டா?
Atlee Next Movie
மேலும் இப்படத்தை இயக்க இயக்குனர் அட்லீக்கு ரூ.100 கோடி சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதில் ஹீரோவாக நடிக்கும் அல்லு அர்ஜுன் ரூ.300 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சாய் அபயங்கரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் அட்லீ. இந்நிலையில், அப்படத்தில் மற்றுமொரு மாஸ் ஹீரோ இணைந்திருக்கிறார்.
Actor Sivakarthikeyan
அவர் வேறு யாருமில்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் எஸ்.கே.வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். சிவகார்த்திகேயனும் இயக்குனர் அட்லீயும் நெருங்கிய நண்பர்கள். அட்லீ இயக்குனர் ஆகும் முன்னர் சில குறும்படங்களை இயக்கினார். அதில் சிவகார்த்திகேயன் நடித்த முகப்புத்தக்கம் குறும்படமும் ஒன்று. இதையடுத்து ராஜா ராணி படத்திலேயே சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முயற்சித்த அட்லீ தற்போது அவருடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக் ஆக பேசப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Atlee : வாரிசு நடிகைக்கு அடித்த ஜாக்பாட்; அட்லீ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடி இவரா?