தஞ்சையில் என் மண் என் மக்கள் பயணத்தின் போது வயலில் விவசாயிகள் நாற்றும் நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தானும் அவர்களுடன் இணைந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மாப்பிள்ளைக்கும் - அமெரிக்கா மணப்பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி தேவாரம் திருவாசக பாடலுடன் கல்யாணம் நடைபெற்றது.
தீபாவளி பண்டிகையில் நகர் முழுவதும் குவிந்து கிடந்த டன் கணக்கிலான குப்பைகளை துரிதமாக சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் பிரியாணி விருந்து வைத்து அசத்தி உள்ளது.
தஞ்சையில் நீர்நிலை அருகே அரியவகை வெள்ளை நிற மயில் ஒன்று இறை தேடிக் கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
இளைஞர் வாங்கிய பிஸ்கட்டில் குறை இருப்பதாக கூறியதை அடுத்து பிஸ்கட் கம்பெனி அவருக்கு வேறுமாற்று பிஸ்கட் அனுப்பியதால் புகாரளித்தவர் நெகிழ்ச்சி அடைந்தார்.
தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்கக இயக்குநர் நிதி பன்சால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார்.
தஞ்சையில் விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் தந்தையுடன் வலியால் துடித்த இரண்டு பள்ளி சிறார்களை மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி.
நீட் தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதில் எந்தவித தவறும் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சை நகர் முழுவதும் நீட் விலக்கு நம் இலக்கு என நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் நீட் என்று அச்சிடப்பட்ட இடத்தில் மது என அச்சிட்டு சில விஷமிகள் ஒட்டி சென்று உள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் ஏற்பட்ட போட்டியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முருகையனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
Thanjavur News in Tamil - Get the latest news, events, and updates from Thanjavur district on Asianet News Tamil. தஞ்சாவூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.