தஞ்சையில் விபத்தில் சிக்கிய பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேரை மீட்டு உதவிய துணைமேயர்

தஞ்சையில் விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் தந்தையுடன் வலியால் துடித்த இரண்டு  பள்ளி சிறார்களை  மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி.

First Published Nov 8, 2023, 12:56 AM IST | Last Updated Nov 8, 2023, 12:56 AM IST

தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் விபத்தில் சிக்கி  ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் இரண்டு சிறார்களும். இரண்டு ஆண்களும் சாலையில் கிடந்தனர். சிறார்களின் அலறல் சத்தம் கேட்டு சாலையில் இடது திசையில் காரில் வீட்டுக்கு சென்ற தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி காரை திருப்பி வந்து காயத்துடன் வலியால் துடித்து கொண்டு இருந்த இரண்டு பள்ளி சிறார்களையும், அவரது தந்தையையும் மீட்டு அவர்களை தனது காரில் ஏற்றி  பயப்படாமல் போங்கள் என கூறி தனது உதவியாளரையும் துணைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், விபத்தில் சிக்கிய மற்றொருவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் துணை மேயர். டாக்டர்.அஞ்சுகம் பூபதி வீட்டுக்கு சென்றார். முன்னாள் சென்ற ஜுபிடர் இரு சக்கர வாகனம் மீது. பின்னால வந்த ஆக்டிவா வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிந்தது.

Video Top Stories