இனி கவலை வேண்டாம்.. உடல் உறுப்புகளை விரைவாக கொண்டு செல்லும் வகையில் டிரோன் கண்டுபிடிப்பு..!

தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்கக இயக்குநர் நிதி பன்சால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். 

Invention of drone for rapid delivery of organs tvk

தானம் செய்யப்படும் உடல் உறுப்புகளை அதிவிரைவாக உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான குறைந்த எடையுடைய டிரோன் சாதனம் தஞ்சையில் அறிமுகம் செய்யப்பட்டது.

தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சார்ந்த தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி இயக்கக இயக்குநர் நிதி பன்சால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பது பொருட்களை அறிமுகம் செய்து வைத்தார். இதில்  விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் சாலை வழியாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு உரிய நேரத்தில் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. 

இதை மிக விரைவாக தொடர்புடைய மருத்துவமனைக்கு அனுப்பி, நோயாளிக்கு உரிய நேரத்துக்குள் கிடைக்கும் விதமாக டிரோன் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டிரோனில் தட்பவெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளக்கூடிய 3 டி பிரிண்டட் வசதியுடைய பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், ஜிபிஎஸ் சாதனமும் இணைக்கப்பட்டுள்ளதால், உடல் உறுப்புகளுடன் கூடிய இந்த டிரோன் பெட்டி எங்கு பறக்கிறது? என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் தொடர்புடைய மருத்துவமனைக்கு நேரடியாக செல்லும் வகையில் மின்சாதனம் மற்றும் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரோனில் தற்போதுள்ள பெட்டிகளின் எடை 20 கிலோ உள்ள நிலையில், இப்பெட்டி உடல் உறுப்புகளுடன் சேர்த்து 5 கிலோ எடையில்தான் உள்ளது. டிரோன் எடை குறைவாக இருந்தால், பேட்டரி பயன்பாடு நீடித்து, அது செல்லக்கூடிய தொலைவு அதிகமாக இருக்கும். இந்த டிரோன் ஒரு கிலோ மீட்டரை 2 நிமிடங்களில் கடந்துவிடும். அதிகபட்சமாக 20 கி.மீ. வரை செல்லும். முதல் முதலாக ஐந்து கிலோ எடைக்கு உள்பட்ட டிரோன் பெட்டி இப்பல்கலைக்கழகம்தான் கண்டுபிடித்து, மேலும் இதன் தொலைவையும் பேட்டரி திறனையும் மேம்படுத்தி நீண்ட நேரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் இது மருத்துவ பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios