Asianet News TamilAsianet News Tamil

மின்னல் வேகத்தில் சுத்தப்படுத்தப்பட்ட நகரம்; தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து

தீபாவளி பண்டிகையில் நகர் முழுவதும் குவிந்து கிடந்த டன் கணக்கிலான குப்பைகளை துரிதமாக சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் பிரியாணி விருந்து வைத்து அசத்தி உள்ளது.

First Published Nov 15, 2023, 9:45 PM IST | Last Updated Nov 15, 2023, 9:45 PM IST

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  பண்டிகையின் போது பட்டாசு குப்பைகள், வியாபாரம் செய்த துணிமணி, பிளாஸ்டிக் குப்பைகள் என தஞ்சை மாநகரம்  முழுவதும்   டன் கணக்கில்  குப்பைகள் சேர்ந்தன. இதனை நூற்றுக்கும்   மேற்பட்ட  தூய்மை பணியாளர்கள் 60 வாகனங்களில் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு மாநகரம் முழுவதையும் தூய்மைப்படுத்தினர். 

நேரம் காலம் பார்க்காமல் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், தனியார்  தொண்டு நிறுவனம்  சார்பில் 100  தூய்மை பணியாளர்களை உயர்தர அசைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சுட சுட முட்டையுடன் மட்டன் பிரியாணி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Video Top Stories