Asianet News TamilAsianet News Tamil

தஞ்சையில் யார் பெரியவர் என்பதில் ரௌடிகளிடையே மோதல்; ஒருவர் வெட்டி படுகொலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் ஏற்பட்ட போட்டியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முருகையனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. 

man killed by suspicious persons in thanjavur district vel
Author
First Published Nov 1, 2023, 7:41 PM IST | Last Updated Nov 1, 2023, 7:41 PM IST

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அடுத்துள்ள திருச்சென்னம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் வி.எஸ்.எல்.குமார் என்கிற முருகையன். இவர் மீது திருக்காட்டுப் பள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருக்காட்டுப்பள்ளியில் தாதாவாக வலம் வருவதில் இவருக்கும். மற்றொரு தரப்பினருக்கும் இடையே போட்டி நிலவி வந்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மீனவர்கள் கைது செய்யப்பட்டால்; தமிழர்கள் தானே என மத்திய அரசு அலட்சியம் செய்கிறது - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த நிலையில், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் குமார் தனது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவரை 3 பைக்குகள், ஒரு காருடன் பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரது இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குமாரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதில் தலை துண்டான நிலையில், குமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். திருக்காட்டுப் பள்ளி பகுதியில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. குமார் கொலையை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios