தஞ்சையில் நீர்நிலை அருகே இறை தேடிய அரியவகை வெள்ளை மயில்

தஞ்சையில் நீர்நிலை அருகே அரியவகை வெள்ளை நிற மயில் ஒன்று இறை தேடிக் கொண்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

Share this Video

தஞ்சாவூரை அடுத்துள்ள ஈச்சங்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரிக்கு பின்புறம் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரையில் வெள்ளை நிற மயில் ஒன்று தென்பட்டுள்ளது. வெள்ளை மயில்களை காண்பது அரிது என்பதால், ஆற்றங்கரையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தனது செல்போனில் வெள்ளை மயில் ஒன்று அழகாக நடந்து செல்வதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Related Video