நீட் தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் விளக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக அரசுப்பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதில் எந்தவித தவறும் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Share this Video

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வு பயிற்சி மையம் செப்டம்பர் மாதமே தொடங்கி விட்டோம். ஒரு புறம் நாங்கள் சட்ட போராட்டம் நடத்தி கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வை நிறுத்தும் வரை, ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களால் தனியார் நிறுவனங்களில் இரண்டு லட்சம். மூன்று லட்சம் கட்டி பயிற்சி மையங்களில் படிக்க முடியாது. 

குழந்தைகளை வளர்த்து எடுக்க கூடிய பொறுப்பு உள்ளது. அரசு பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவது தப்பில்லை. எல்லோரிடத்திலும் வாங்கலாம். ஒவ்வொரு அரசாங்கத்திற்க்கும் தங்களுடை கருத்தை சொல்வதற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றமே சொல்லிவிட்டது என அவர் தெரிவித்தார்.

Related Video