நீட் விலக்கு தொடர்பான திமுகவின் போராட்டத்தை ட்விஸ்ட் செய்து திமுகவுக்கே ஆப்படித்த ஆசாமிகள்

தஞ்சை நகர் முழுவதும் நீட் விலக்கு நம் இலக்கு என நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் நீட் என்று அச்சிடப்பட்ட  இடத்தில் மது என அச்சிட்டு சில விஷமிகள் ஒட்டி சென்று உள்ளனர்.

Share this Video

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தி.மு.க.சார்பில் நடைப்பெற்று வருகிறது. அதற்காக தஞ்சையில் நீட் விலக்கு நம் இலக்கு என்று அச்சிட்ட பெரிய அளவிலான சுவரொட்டி தஞ்சை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில விஷமிகள் நீட் என்று அச்சிட்ட இடத்தில் மது என்று அச்சிட்டு ஒட்டி சென்று உள்ளனர். கண்காணிப்பு கேமரா எந்த பகுதியில் இல்லையோ அந்த இடங்களில் இது போன்று ஒட்டி உள்ளனர். தங்கள் அடையாளம் கண்டு பிடிக்க கூடாது என கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத இடங்களை தேர்ந்தெடுத்து ஒட்டி உள்ளனர்.

Related Video